கடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளரின் பினாமி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
கடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் பினாமி செந்தில் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆத்தூரில் உள்ள செந்தில் குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைந்தது.
முன்னதாக, கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளராக பணிபுரியும் பாபு என்பவர் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதின் அடிப்படையில் பிடிப்பட்டார்.
பாபுவின் சொந்த ஊரான கடலூர் தவ்லத் நகரில் உள்ள அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை மேற்கொண்டனர். அதில், ஒரு கோடிக்கும் மேல் தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப் பட்டது.
அப்போது கட்டுக்கட்டாகப் பைகளில் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் பணம் எண்ணுவதற்கு இயந்திரமும் நகைகளை மதிப்பிட நகை மதிப்பீட்டாளரையும் வரவழைத்து சுமார் 8 மணி நேரம் மதிப்பீடு செய்தனர்.
முடிவில் ரூ.33.5 லட்சம் பணம், 140 சவரன் நகைகள், 15 கிலோ வெள்ளி மற்றும் 48 வங்கிக் கணக்கு பாஸ் புத்தகங்கள், 6 வங்கி லாக்கர்களின் சாவிகள் மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பாபுவின் வீட்டிலிருந்து கைப்பற்றினர்.




