spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்இஸ்லாமியரின் பள்ளியில் எங்கள் பிள்ளைகள் இனி படிக்க மாட்டார்கள்: செங்கோட்டையில் அடுத்து கிளம்பும் பூதம்!

இஸ்லாமியரின் பள்ளியில் எங்கள் பிள்ளைகள் இனி படிக்க மாட்டார்கள்: செங்கோட்டையில் அடுத்து கிளம்பும் பூதம்!

- Advertisement -

senkottai vinayakar chaturti issue9

செங்கோட்டை: இஸ்லாமியர் நடத்தும் பள்ளியில் எங்கள் பிள்ளைகள் இனி படிக்க மாட்டார்கள்; நாங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என்று களம் இறங்கிய ஹிந்துக்களால் இன்று காலை செங்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, மிகக் குறைந்த அளவில் இஸ்லாமியக் குடும்பங்கள் வசிக்கும் பொதுத் தெருவில், ஊர்வலம் வரக் கூடாது என்று பிரச்னை தொடங்கப் பட்டது. அது கல்லெறியில் தொடங்கி பின்னர் கலவரத்தில் முடிந்தது. தொடர்ந்து இஸ்லாமிய மதவாத அமைப்புகளால் தூண்டப் பட்ட இளைஞர்கள், ஒட்டுமொத்தமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலமே திருநெல்வேலி மாவட்டத்தில் எங்குமே நடத்தப் படக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதற்கு ஆட்சியரும், அதெல்லாம் இங்க பேசாதீங்க.. எங்களுக்குத் தெரியும். நாங்க பாத்துக்கிறோம். அதெல்லாம் பேசாம இருக்கணும்.. என்று சொல்லி, இஸ்லாமிய இளைஞர்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பவர் போல் நடந்து கொண்டார்.

sengottai all party meeting1

இந்நிலையில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அராஜகப் போக்கைக் கண்டித்து, செங்கோட்டை நகரில் அனைத்து ஹிந்து சமுதாய மக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் சில முடிவுகளும் தீர்மானங்களும் எடுக்கப் பட்டன.

அதன்படி, இஸ்லாமியர்களின் கடைகளில் இந்துக்கள் இனி எந்தப் பொருளும் வாங்கக் கூடாது. இது ஊர்க் கட்டுப்பாடாக ஹிந்துக்கள் பின்பற்ற வேண்டும். இஸ்லாமியர்களுடன் எந்த விதமான வர்த்தகத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. எவரும் பார்டர் கடைகளுக்கு சென்று இஸ்லாமியர்களின் கடைகளில் புரோட்டா சாப்பிடக் கூடாது என்றெல்லாம் தீர்மானங்கள் நிறைவேறின.

sengottai all party meeting

இதுகுறித்தும் அமைதிக் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியரிடம் சில இஸ்லாமிய பெரியவர்கள் கேள்வி எழுப்பி, இவ்வாறு தீர்மானம் போடுவது தவறு என்று கூறினர். அதற்கு ஆட்சியர், அதில் நான் தலையிட முடியாது என்று ஒதுங்கினார்.

இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட ஒரு பிரச்னை நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. செங்கோட்டை நகரில் 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ள நிலையில் காவலர்கள் பாதுகாப்புக்காக அங்கங்கே நின்று கண்காணித்து வருகின்றனர். ஊரில் கடந்த இரு தினங்களாக எந்த அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக இருந்த நிலையில், இன்று காலை மேலூர் பகுதியில் மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களால் தூண்டப் பெற்ற இளைஞர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலூர் பகுதியில் மசூதிக்குச் சொந்தமான நிலத்தில் கிரசண்ட் பள்ளி என்ற துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே அருகே உள்ள ஹிந்துக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் படித்து வருகின்றனர். செங்கோட்டையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக கடந்த நான்கைந்து நாட்களாக ஹிந்துக் குடும்பங்களைச் சார்ந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

இந்நிலையில், காலாண்டுத் தேர்வு என்பதால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பள்ளியில் இருந்து பெற்றோர்க்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது. ஆனால், பெரிதும் தயங்கிய பெற்றோர்களில் ஒருவர், இன்று தனது குழந்தையையும் பக்கத்து வீட்டுக் குழந்தையையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றிருக்கிறார். ஆனால், மசூதியை அடுத்து அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர், அவரை மிரட்டியதுடன், இனிமேல் இந்தத் தெருவிலோ, இந்தப் பகுதிக்கோ, மசூதி அருகிலோ வரக்கூடாது, வந்தால் கையை காலை எடுத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

senkottai vinayakar chaturti issue6a

இதை அடுத்து பயந்து போன அவர், சம்பந்தப் பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் தகவலைக் கூறியுள்ளார். இதை அடுத்து, அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் சென்று, தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என்றும், மாற்றுச் சான்றிதழை உடனடியாகக் கொடுத்துவிடுமாறும் கூறியுள்ளனர். இந்தத் தகவல் கேள்விப் பட்ட ஜமாத்தினர், உடனே ஓடி வந்து, அந்தப் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளனர். அவ்வாறெல்லாம் அசம்பாவிதம் நடக்காது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் குழந்தைகளை தொடர்ந்து இந்தப் பள்ளியிலேயே படிக்க வையுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் உங்கள் தரப்பு இளைஞர்களை நீங்கள் அறிவுரை சொல்லி அடக்காத வரை எங்களால் இங்கே பயம் இன்றி வர முடியாது. எனவே டிசியைக் கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை தொடர்ந்து செல்லவே, போலீஸாரிடம் புகார் கூறி வரச் சொல்லியுள்ளனர்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் குறித்தும் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் இரு தரப்பிலும் சமாதானப் பேச்சு நடத்தி வருகின்றனர். ஊர் அமைதியாக இருக்க வேண்டும் என்று இஸ்லாமியப் பெரியவர்கள், ஜமாத்தார், இந்து சமுதாய மக்கள் என பலரும் முன்வந்து கூட்டம் போட்டு பேசிச் சென்றாலும், இளைஞர்கள் சிலரின் தூண்டுதலால் பதற்றம் மேலும் மேலும் அதிகரித்தவண்ணம் உள்ளது ஊர் மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe