ஈழத் தமிழர் படுகொலைக் குற்றவாளி திமுக., என்று கூறி பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது முதல்வர் தலைமையில் அதிமுக.,! இதற்கான கண்டனக் கூட்டங்கள் ஆங்காங்கே நடந்துவருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஈழத்தமிழர் படுகொலை விவகாரத்தில், போர்க் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வலியுறுத்தி, அமைச்சர்கள் பங்கேற்ற பொதுகூட்டங்கள் நடைபெற்றன.
ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்டதில் திமுக – காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி போர்க் குற்ற விசாரணை நடத்தித் தண்டிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட்டாலும் எதிர்க்க வேண்டியதை கண்டிப்பாக எதிர்ப்போம்! ஆட்சி கலைந்துவிடும் என்ற டிடிவி தினகரன் கனவு ஒரு போதும் ஈடேறாது, துரோகம் இழைத்தவர்களை அம்மாவின் ஆன்மா சும்மா விடாது என்று எச்சரித்தார் ஸ்டாலின்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, 2008ஆம் ஆண்டு பிரியங்கா காந்தி, வேலூர் சிறையில் நளினியை சந்தித்த போது, தந்தையைக் கொலை செய்தது யார் என தெரிந்த பின்பு தான் இலங்கையில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர் என்றார்.




