இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்: பெரம்பலூர் அருகே இந்துக்கள் எடுத்த முடிவு!

Published:

perambalur vakalathur people protest - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எடுத்த முடிவைப் போல், பெரம்பலூர் கிராம பஞ்சாயத்தில் இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்களை வாங்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். இது ஒரு திருப்புமுனையான முடிவாகவே பார்க்கப் படுகிறது.

இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் முஸ்லிம்கள் தடையாக நின்றதும், அச்சுறுத்தியதும்தான்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, வ.களத்தூர் கிராமத்தில், இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்று கூறி, தேரோட்ட வீதியில் சாமி சப்பரம் செல்வதற்கு தடை விதித்தது காவல் துறை. இதை அடுத்து, உள்ளூர் மக்கள் கொதித்தனர். போராட்டக்களத்தில்இந்து முன்னணி குதித்தது.

தேரோடும் ராஜ வீதியில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு உள்ளது என்றும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ராஜ வீதியில் சுவாமி சப்பரம் எடுத்துச் செல்லக் கூடாது என்றும்  காவல் துறை தெரிவித்தது. மேலும் சாமி சப்பரம் எங்கள் வீதி வழியாக வரக்கூடாது என்று முஸ்லீம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

காவல்துறை அதிகாரிகள் முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று மூன்று நாள் செல்லும் சாமி சப்பரத்தை ஒரே நாளில் மூன்று சாமியையும் ஒரே சப்பரத்தில் வைத்து  இந்தத் திருவிழாவை முடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகிகளை வற்புறுத்தினர்.

அதை எதிர்த்து கிராம மக்கள் ஒன்று திரண்டனர். தங்கள் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை இஸ்லாமியர்கள் நசுக்குவதாகக் கூறி, போராட்டத்தை அறிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி களத்தில் இறங்கியது.  தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img