பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் இந்துக்களுக்கு நியாயம் கோரி இன்று பெரம்பலூரில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 3 நாட்கள் நடத்தப்பட வேண்டிய ஊர்த் திருவிழா வானது ஒரு நாள் மட்டும் நடத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்டது.
கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடம் 3 நாட்கள் நடத்தக் கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரினர். இந் நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று இரவு வ.களத்தூர் பிள்ளையார் கோவில் திடலில் நடைபெற்ற ஊர்ப் பொதுக்கூட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
- வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக் கோரியும்
- தேரோடும் வீதியில் வேற்று மத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக் கோரியும்…
- பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும்
இன்று (26.09.2018) வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெறும். அருகில் உள்ள இந்து சமுதாய மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கோரப் பட்டது.





