சென்னை: சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 60 சிலைகள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. மொத்தம் 89 பொருள்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இன்று மேற்கொள்ளப் பட்ட அதிரடி சோதனையில், 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 60 சிலைகளை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொன்மையான கோவில்களின் தூண்கள் மற்றும் கற்சிலைகளும் பறிமுதல் செய்யப் பட்டதாகக் கூறினர். இவை மொத்தம் 89 பொருள்கள் என்று கூறப் பட்டுள்ளது.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இவை சிக்கின.





தொடரà¯à®Ÿà¯à®Ÿà¯à®®à¯ வேடà¯à®Ÿà¯ˆ…..
அழியடà¯à®Ÿà¯à®®à¯ திரà¯à®Ÿà®°à¯ கோடà¯à®Ÿà¯ˆ