December 5, 2025, 8:23 PM
26.7 C
Chennai

நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் காவல்துறை; வ.களத்தூரில் இஸ்லாமியரிடம் மண்டியிட்ட பரிதாபம்!

perambalur vakalathur people protest - 2025

வ.களத்தூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி சுவாமி ஊர்வலம் நிறுத்தப் பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மண்டியிட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட காவல் துறையைக் கண்டு இந்துக்களுக்கு பரிதாபம்தான் மேலோங்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது.

காவல் துறை அனுமதிக்காததை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக 3 நாட்கள் திருவிழா நடத்திக் கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 1 நாள் மட்டும் திருவிழா நடத்த அனுமதி அளித்தது.

கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடம் 3 நாட்கள் நடத்தக் கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரினர். இந் நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துவிட்டது.

வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக் கோரியும், தேரோடும் வீதியில் இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக் கோரியும்  பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் கடந்த (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து  முன்னணி சார்பாக பெரம்பலூரில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடைபெற்றது.

வ.களத்தூரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் 3 நாள் சுவாமி திருவிழாவை நடத்த அனுமதிக்க பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு உதரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

28.09.218 அன்று மூன்று நாட்கள் திருவிழா நடத்த அனுமதிக்கவும் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தீர்ப்பு தந்த உற்சாகத்தில் முன்பே முடிவு செய்யப்பட்ட தேதிகளான செப்டம்பர் 28,29 மற்றும் 30  ஆகிய தேதிகளில் திருவிழா நடத்த வ.களத்தூர் மக்களால் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிகழ்வான ஸ்ரீ ராயப்பா சுவாமிக்கு குடி அழைப்புடன் சுவாமி திருவிழா தொடங்கியது.

சுவாமிக்கு பொங்கல் மாவிளக்கு முடிந்து,  சுவாமி ஊர்வலத்திற்கு சப்பரத்தில் உற்சவர் சிலைகளை வைத்து அலங்கரிக்கும் பணியில் இந்துக்கள் ஈடுபட்டிருந்தனர். பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஊரில் முகாமிட்டிருந்தனர்.

சுமார் 3000 முஸ்லிம்கள் வ.களத்தூரில் வசித்து வருகின்றனர். ஆனால் வெறும் 30 பேர் கொண்ட ஒரு கும்பல் திருவிழா ஊர்வலம் தேரோடும் ராஜவீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் வரக்கூடாது என்று கூடி கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.

திடீரென இரவு 9 மணி அளவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் புகுந்து வ.களத்தூரில் 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது என்றும், எனவே சுவாமி ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் கூறியதுடன் தெருவில் யாரும் நிற்கக் கூடாது மீறி நின்றால் கைது செய்வோம் என்றும் மிரட்டினர்.

நீதிமன்றம் அனுமதி வழங்கியும் பிரச்னை செய்பவர்களை விட்டுவிட்டு, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஊர்வலத்தை ஏன் தடை செய்கிறீர்கள் என பெண்கள் சிலர் கேட்கவும் செய்தனர். ஆனால் எதையும் காதில் வாங்காத பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல் தங்கள் வீட்டு வாசலில் உட்காரக் கூட அனுமதிக்காமல் இந்துக்களை விரட்டியது.

மேலும் வ.களத்தூர் தேரடித் திடலில் சப்பரத்தில் சுவாமி சிலைகளை அலங்காரம் செய்து கொண்டிருந்த மக்களையும் விரட்டியதால் சப்பரத்தில் இருந்த அலங்கரிக்கப் பட்ட  சுவாமி சிலைகள் இரவு முழுதும் நடுத் தெருவில் கவனிப்பார் யாருமற்ற நிலையில் நின்றது . அதை அடுத்து, போலீஸாரே சுவாமி சிலைகளை அங்கிருந்து அகற்றி வாகன மண்டபத்தில் வைத்தனர்.

இந்துக்களை தங்கள் வீட்டுத் திண்ணையில் கூட உட்கார அனுமதிக்காத காவல் துறை பிரச்சினை செய்து கொண்டிருந்த 30 இஸ்லாமியர்களை ஒன்றும் செய்யாததுடன்  அவர்கள் வசிக்கும் ராஜவீதி தெருவில் கூட செல்வதற்கு அஞ்சிய காட்சி அரங்கேறியது. ஆம்பூரில் ஓட ஓட விரட்டி அடிவாங்கிய அவலச் சம்பவம் மீண்டும் மீண்டும் காவல் துறையினரின் நெஞ்சில் அலைமோதியதோ என்னவோ என்றுதான் காவல்துறையினர் வ.களத்தூரில் கோழைகள் போல் மண்டியிட்ட நிகழ்வையும் இந்துக்கள் பேசிக் கொண்டனர்.

இவ்வளவு நடந்தும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொண்டு அமைதியான முறையில் தங்கள் வீட்டில் முடங்கினர் இந்துக்கள். ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத பெரம்பலூர் மாவட்ட காவல் துறை இஸ்லாமியருக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 144 தடை உத்தரவு போட்டு இந்துக்களுக்கு அரசியல் சட்டம் 25 வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை குப்பையில் வீசி வ.களத்தூர் இந்துக்களின் வழிபட்டு உரிமையை தடுத்த பெரம்பலுர் மாவட்ட காவல்துறை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், நிறுத்தப்பட்ட 3 நாள் திருவிழாவை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே வ.களத்தூர் இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories