
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் இரும்புக் கம்பியால் தன்னை கண்மூடித் தனமாகத் தாக்கி, காயப்படுத்தியதாக அவரது 3ஆவது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் மன்சூர்அலி கான் தமிழ்ப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். வில்லன் வேடம், குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் அவரது 2வது மனைவி ஹமீதா, மன்சூர் அலி கானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்புப் கம்பிகளால் கண்மூடித்தனமாகத் தாக்கி காயப் படுத்தினார்களாம்.
இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த வஹிதா, மன்சூர் அலிகான் மற்றும் ஹமீதா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த பின்னர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று வஹிதா சிகிச்சை பெற்றார்.



