ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
ராமநாதபுர மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் வரும் 30ம் தேதி முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழாவும், 56 வது குருபூஜை விழாவும் கொண்டாடப்பட உள்ளது.
அதனையொட்டி இன்று அதிகாலை 5.15 மணியளவில் பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் தலைமையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




