ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை காரணமாக கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த நிலையில் வெள்ளம் புகுந்த பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு அலுக்குளியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் இடம் ஒதுக்கப்படும் என்றார்.



