சர்காரில் சர்ச்சை காட்சிகள் நீக்கப் பட்டுவிட்டன என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
சர்கார் பட விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது…
தமிழக அரசு திரைத்துறையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து உதவி வருகிறது. தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது என்று கூறினார்.
மேலும், பல திரைப்படங்கள் அரசை விமர்சித்து வந்திருக்கின்றன; அவற்றை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், சர்கார் படம் பார்த்துவிட்டு நடிகர் விஜய்யை தொடர்பு கொண்டு சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு கூறினேன்.
பட விநியோகஸ்தரிடம் பேசி தயாரிப்பு நிறுவனம் மூலம் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன என்று கூறினார் கடம்பூர் ராஜு.
முன்னதாக, இலவச பொருட்களை தீயிட்டு எரிக்கும் 5 நொடி காட்சிகள் நீக்கம். கோமளவல்லியில், கோமள என்ற சொல் ம்யூட் செய்யப்படும். கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை ம்யூட் செய்யப்படும்… என்று கூறப் பட்டிருந்தது.




