சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்… என்று சென்னை உயர் நீதிமன்றம் அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.
சர்கார் பட விவகாரத்தில், தணிக்கை சான்றிதழ் வழங்கிய படத்திற்கு எதிர்ப்பு ஏன்? சர்கார் பட போஸ்டரை கிழித்தவர்களில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்? சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தியவர்கள் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டு உள்ளன என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.




