கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளிதார். அப்போது அவர் கூறியதாவது: 18 தொகுதிகளிலும் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது ஏன்? மடியில் கனம் இல்லை என்றால் தைரியமாக வழக்கை எதிர்கொள்ள வேண்டியது தானே?
அதிமுகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன் தான். தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம். தொண்டர்களோடு சேர்ந்து பொதுமக்களும் போராடியதால் தான் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கினார்கள்
தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள்.
கமலுக்கு 64 வயது ஆகிவிட்டதால் சினிமாவில் நடிக்க முடியாமல் அரசியலில் நடிக்க வருகிறார் என்றார்.



