கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருப்பதாகக் கூறிய மாநில சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டெங்குவுக்கு நிலவேம்பு கசாயத்தையும், பன்றிக் காய்ச்சலுக்கு கபசுரக் குடிநீரையும் பருக வேண்டும் என்று கூறினார்.
திருவண்ணாமலையில் மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் ஆகியவற்றை அவர் வழங்கிய ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரையும், பன்றிக் காய்ச்சலுக்கு கபசுரக் குடிநீரையும் பருகவேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, கைகளை சுத்தமாகக் கழுவும் முறை குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது.




