சமூக நலத்துறையுடன் இணைந்து அங்கன்வாடி மையங்களில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு LKG, UKG கற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் விரைவில் நிறைவேற்றப்படும். இதில் தவறு நடைபெற்றதாக செய்திகள் வருகிறது! அப்படி எதுவும் தவறு நடைபெறவில்லை- என்று, வேலூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எல்லா துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பள்ளி கல்வித் துறையில் பல்லேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது.
9, 10, 11,12- ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து வகுப்பிலும் கணினி மயமாக மாற்றி இணைய சேவை செய்ய நடவடிக்கை எடுத்து, தற்போது 4 மாவட்டங்களில் 300 பள்ளிகளில் இணைய சேவை இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதல்வரின் ஒப்புதலுக்கு பிறகு ஜனவரி மாதத்திற்குப் பிறகு சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து அங்கன்வாடி மையங்களில் இருக்கக்கூடிய 52,412 மாணவர்களுக்கு LKG, UKG கற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறோம்.
அன்டல்டிங்கர் என்ற புதிய பாடத் திட்டத்தை அறிவியல் மூலமாக கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு 12வது மாணவர்களுக்கு ஸ்கில் டிரைனிங் மூலம் 12 பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்த உடனேயே வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
உபரி ஆசிரியர்களை அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்திற்கு உட்பட்டுள்ள பள்ளிகளுக்கு பணி மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது!அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நிரப்பப் படாமல் உள்ள பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் 7500 ரூபாய் ஊதியத்தில் நிரப்ப உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் விரைவில் நிறைவேற்றப்படும். இதில் தவறு நடைபெற்றதாக செய்திகள் வருகிறது. அப்படி எதுவும் தவறு நடைபெறவில்லை. இதில் ஏற்பட்டுள்ள தவறு என்னவென்றால் தமிழில், ராணுவத்தினர், விதவைகள் சான்றுகள் சரியாக வழங்கப்படவில்லை. இந்த சான்றுகளை கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம்தான் வழங்க வேண்டும் என ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை பெற்றுத் தராததால் பணி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வேலூரில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறினார்.




