புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கடந்த 16ந்தேதி காலை கஜா புயல் தாக்கி அறந்தாங்கி நகரம ஒன்றிய பகுதிகளை புரட்டி போட்டது.இதனால் அறந்தாங்கி பகுதி விவசாயிகள் மீளா அதிர்ச்சியில் உள்ளனர்.தோட்டப்பயிர்களான தென்னை மரம் அடியோடு சாய்ந்தது.தென்னை மரத்தை பொறுத்தவரை 5 வருடம் பராமரித்தால் மட்டும் தேங்காய் காய்க்கும் இந்நிலையில் அரசர்குளம் பகுதியில் பல தோப்புகளில் பல வீடுகளில் பல ஆயிரம் மரங்கள் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் மீளா துயரத்தில் உள்ளனர்.இந்நிலையில் அறந்தாங்கி வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம் முன்னிலையில் சிவகங்கை தொகுதி எம்பி செந்தில்நாதன் ஆய்வு செய்து பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்று தர ஏற்பாடு செய்யப்படு்ம் என்றார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளத்தில் சிவகஙகை தொகுதி எம்பி செந்தில்நாதன் ஆய்வு
Popular Categories



