December 4, 2021, 4:31 pm
More

  நாய் ஆடு ஆன கதை… பாலிமர் டிவி செய்தியாளரின் வைரலான விளக்கம்!

  dog meat - 1

  நாய்க்கறி ஆட்டு மாமிசம் ஆன பகீர் பின்னணியில், பாலிமர் டிவி.,யை மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள் என்பது குறித்து அதன் செய்தியாளர் விளக்கம் அளித்ததாக, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் வைரலாகப் பரவும் செய்தி இதுதான்…

  தடா. அப்துல்ரகீம் கவனத்திற்கு…..: மேலே உள்ள அனைத்து செய்தி சேனல்களும் நாய் இறைச்சி குறித்து செய்தி வெளியிட்ட நிலையில் polimer news சேனல் மீது மட்டும் தனிப்பட்ட காழ்ப்புனர்ச்சி ஏன்?

  பரிசோதனை முடி வின் படி ஆடு என்று தெரியவந்துள்ளது என்று செய்தி வெளியிட்ட பின்னரும் போராட்டம் ஏன்…. பின்னணியில் இருப்பது யார் ? எதற்காக இந்த போராட்டம் ?

  காரணம் 1. சில மாதங்களுக்கு முன்பு கடத்தல் வழக்கில் தடா அப்துல் ரஹீம் அவர்கள் கைதான போது பாலிமர் நியூஸ் மட்டுமே செய்தி வெளியிட்டது!

  காரணம் 2:
  புழல் சிறையில் மததலைவர்கள் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ராஜ உபசாரம் சிறையில் பிரியாணி தயாரித்து சொகுசு வாழ்க்கை வாழும் செய்தி முதலில் பாலிமர் நியூசில் மட்டுமே ஆதாரத்துடன் வெளியானது!

  காரணம் 3 :
  ஆசிப் பிரியாணி தரமற்ற முறையில் தயாரிக்கபடுவதாக உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சமையல் கூடத்துக்கு சீல் வைத்த செய்தி விஷூவலுடன் முதலில் பாலிமர் நியூசில் வெளியானது!

  காரணம் 4: ஆசிப் பிரியாணியில் புழு கிடந்த செய்தியும் பாலிமர் நியூசில் மட்டுமே முதலில் வெளியானது!

  காரணம் 5: வெளி மா நிலங்களில் இருந்து கெட்டுப் போன இறைச்சி சென்னைக்கு கொண்டு வரப்படும் தகவலை தொடர்ந்து ஆதாரத்துடன் வெளியிட்டு வருவது பாலிமர் நியூஸ் மட்டுமே..!

  இதனால் கெட்டுப்போன இறைச்சியை சென்னையில் உள்ள ஓட்டல் களுக்கு சப்ளை செய்வோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறது குறிப்பிட்ட கும்பல்..!

  இது போன்று எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் மக்கள் நலனே முக்கியம் என்பதில் பாலிமர் நியூஸ் உறுதியாக உள்ளது!

  தமிழகத்தில் ஆடுகள் இல்லையா ? அதை வாங்கி விற்பனை செய்ய வேண்டியது தானே ?

  வெளி மாநிலத்தில் குறைந்த விலை என்றால் உயிரோடு வாங்கி வந்து வெட்டி விற்கலாமே ? ஏன் தலையில்லா வால் நீளமான ஆட்டு இறைச்சியை ரெயில் மூலம் கொண்டு வர வேண்டும்..?

  நாய் என்று சர்ச்சை எழும் முன்பாக யாருக்கு வந்த இறைச்சி என்று வாய் திறக்கால் மூடிக்கொண்டு இருந்தவர்கள்… நாய் இறைச்சி என்று அதிகாரிகள் சொன்ன தகவலை மீடியாக்கள் வெளியிட்ட உடன் இது ஆடுதான் என்று வீதிக்கு வருகிறார்கள்?

  கெட்டுப்போன இறைச்சியை இவ்வளவு காலமும் விற்றவர்கள் யார் என்பது போராட்டத்துக்கு வருபவர்கள் மூலம் வெளிச்சத்துக்கு வர இருக்கின்றது.

  ரெயிலில் கொண்டு வரப்பட்ட இறைச்சி கெட்டு போனவை…. என்பதை ஆய்வறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது.

  அதை விற்பது தான் வாழ்வாதாரமா ? வாங்கும் மக்களை நினைத்து பாருங்கள்…

  நீங்கள் அறிவித்த போராட்டத்துக்கு அஞ்ச போவதில்லை…. மக்கள் நலனே முக்கியம்… வியாபாரிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்…!

  நியாயமான விவகாரத்துக்கு போராடினால் மக்கள் துணை நிற்பார்கள்…. மற்றவை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..!

  தங்களுடைய கருத்தை தெரிவிக்க எப்போது வேண்டுமானாலும் சம்பந்த பட்டவர்கள் அலுவலகம் வரலாம்..!

  அன்புடன்,

  வேல்ராஜ்,

  பாலிமர் நியூஸ்,

  ராயபேட்டை,

  சென்னை..!

  9 COMMENTS

  1. I like polymer news

   வேசி ஊடகம் மத்தியில்
   உண்மை யான கண்ணகி ஊடகம்

   We support polimer

  2. உண்மையை அரசு மறைத்தால் ஊடகங்கள்தான் வெளியில் கொண்டு வர வேண்டும்

  3. One wonders whether MVC even was asked toe the line as it is learnt that the specimen sent for the analysis were stated to have been destroyed with out giving room for a 2nd opinion! the Govt, of TN tries to project its secular immage!

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,787FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-