பிரதமர் குறித்து அவதூறு: தமுமுக.,வினர் மீது வழக்கு பதிவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

mic phone - 2026

சென்னை:  பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

தமுமுக சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் மே மாதம் நான்காம் தேதி ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் குறித்து அந்தக் கட்சியினர் அவதூறாக பேசி உள்ளனர்.

இது குறித்து புகார்கள் அளிக்கப் பட்டன. இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று காலை 11 மணியளவில் மனித நேய மக்கள் கட்சி கொள்கைப் பரப்பு செயலாளர் செய்யது தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் மீது பொது இடத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுதல், இரு அமைப்பினர் இடையே மோதல் உருவாக்கும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

1 thought on “பிரதமர் குறித்து அவதூறு: தமுமுக.,வினர் மீது வழக்கு பதிவு!”

  1. இவனுங்களையெல்லாம் செருப்பால அடிச்சி உள்ள தள்ளனும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.