தமிழகம் முழுவதுமாக கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த ஆண்டு முதல் அவ்வப்போது தங்களின் அலுவலக அடிப்படை வசதிகலான தரமான லேப் டாப் ,இணையதள பயன்பாட்டுக்குறிய செலவினங்களை கேட்டுப் போராட்டங்கள் நடத்திவந்தனர் ,தற்போது அந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்து இப்போது இரவு நேர உள்ளிருப்பு போராட்டங்கள் செய்துவருகின்றனர் , ஒரு புறம் போராட்டம் என்றாலும் மக்கள் பணி பெரிதும் பாதிக்காமல் இப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வீ .கே.புதூர் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் ,செயலாளர் பெரியசாமி ,பொருளாளர் ஹக்கீம் தலைமையில் 19 கிராம நிர்வாக அலுவலர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்

இப்போராட்டம் குறித்து கிராம அலுவலர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது
நாங்கள் மக்களுக்கு பயன்படுத்தும் கணினி பயன்பாட்டுக்கான இணையதள சேவை கட்டணம் ,, தரமான மடிக்கணினி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது லேப்டாப்களை தாசில்தாரிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்தினோம்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் தங்கி பல்வேறு கிராமங்களுக்கு பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கவும், பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் உள்ளன ,மேலும் மாநில சங்க முடிவின்படி 7 ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டமும், 10ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என தொடர் போராட்டம் நடத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. என தெரிவித்தனர்
வீ .கே.புதூரில் வி.ஏ.ஓ- க்கள் உள்ளிருப்பு போராட்டம்
Popular Categories



