அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தென்காசியை அடுத்த நன்னகரத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தியா முழுவதும் அம்பேத்கரின் நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாவட்டம், தென்காசியை அடுத்த நன்னகரத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட எஸ்.சி எஸ்.டி அரசு அலுவலர் நலசங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்பேதகர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போல நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார், திமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், பாஜக சார்பில் எஸ்.சி அணி மாவட்ட தலைவர் இராமகிருஷ்ணன், மகேஸ்வரன் மாவட்ட பொதுச் செயளாலர், சுப நாகராஜன் மாநில துணை தலைவர்
மற்றும் அன்புராஜ், நாகராஜன், குற்றாலம் செந்தூர் பாண்டியன் திருமுருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



