சென்னை: சென்னை அருகே ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித் துறை உதவி ஆணையர் கைது செய்யப்பட்டார். சென்னை அருகே உள்ள நெடுங்குன்றத்தைச் சேர்ந்த கணேஷ் தோல் பொருள்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஏற்றுமதி தொடர்பாக, பம்மலில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்தில் ரூ. 60 லட்சம் செலுத்தியிருந்தார். இந்தப் பணத்தை திரும்பப் பெறுவதற்காக கணேஷ், வணிக வரித் துறை அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்தார். அதற்கு வணிக வரித் துறை உதவி ஆணையர் ராஜாராம் (46) ரூ.1.50 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். இது குறித்து கணேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், கணேஷிடம் ரூ.1.50 லட்சம் பணத்தில் வேதிப் பொருள்கள் தடவி, அதை லஞ்சமாக ராஜாராமிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அனுப்பினர். அதன்படி கணேஷ் வியாழக்கிழமை அந்தப் பணத்தை ராஜாராமிடம் அவரது அலுவலத்தில் கொடுத்துள்ளார், அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ராஜாராமைக் கைது செய்தனர். அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ரூ. 1.50 லட்சம் லஞ்சம்: வணிக வரித் துறை உதவி ஆணையர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari