தீ விபத்தில் ஆம்னி வேன் எரிந்து நாசம்; அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பிய பயணிகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி
omni van fire - 2026

கரூர்: பயணத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து நாசம். விபத்தை முன்கூட்டியே அறிந்ததால் காரில் பயணித்த மூவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

கரூரை அடுத்த இராயனூர் அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் மருதமுத்து மகன் சுந்தர்ராஜ். இவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் மூன்று பேருடன் ஊருக்கு சென்று கொண்டிருக்கும்போது அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட ஈசநத்தம் அருகே உள்ள ம ல்லை நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது காருக்குள் புகை ஏற்பட்டுள்ளது.

உடனே காரை நிறுத்தி சோதிக்கும் போது காரின் முன் பகுதியில் தீ பரவி மளமளவென எரிந்தது. சம்பவம் குறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த ஆம்னி வேனை அணைத்தனர்.

இதனால் யாருக்கும் காயம் இன்றி உயிர் தப்பினர். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.