police force - 2026

அனைத்து நகர, மாவட்ட காவல்நிலையங்களில் வாட்ஸப் குரூப் உருவாக்க டிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸப் குரூப் அட்மினாக அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்க வேண்டும் என்றும், காவலர்களின் சிறப்பான பணியை வீடியோ அல்லது புகைப் படங்களாக பதிவிட்டு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

டிஜிபி.,யின் சுற்றறிக்கை பலவித கருத்துகளை காவலர்கள் மத்தியில் உலவவிட்டுள்ளது. ஏற்கெனவே, காவலர்கள் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பின் போது, அல்லது முக்கியமான பாதுகாப்புப் பணியின் போது, செல்போன்களை பயன்படுத்துவதால், அவர்களின் கவனம் சிதறுவதாகவும், எனவே பணி நேரத்தில், உதவி ஆய்வாளர் நிலைக்குக் கீழ் உள்ள காவலர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிப்பதாகவும் ஒரு சுற்றறிக்கை வந்தது.

இந்நிலையில், காவலர்கள் செல்போன்களைப் பயன்படுத்துவது குறித்த சர்ச்சைகள், விமர்சனங்கள் சமூக தளங்களில் பரவலாக முன்வைக்கப் பட்டு வருகின்றன.

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்க வேண்டும் என்றும் இதன் அட்மினாக ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

இந்த குரூப்பில் அந்தந்த காவல்துறையினர் செய்யும் வேலைகளில் சிறப்பானவற்றை பாராட்டி புகைப்படம் மற்றும் சிறு குறிப்பையும் போடவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் வரும் 18-ம் தேதிக்குள் வாட்ஸ் அப் குழுக்கள் பெயர், யார் அட்மின், அவரது பெயர், அவரது பதவி, எத்தனை உறுப்பினர்கள் அதில் உள்ளனர், எப்போது ஆரம்பித்தது என்பது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending