கருப்பு கொடி காட்டினால்… செருப்புக் கொடிதான்! பதிலடி கொடுக்கும் பாஜக..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
modi kerala1 - 2026

மதுரை நகருக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என மதிமுக.,. பொ.செ., வைகோ, மே 17 இயக்க திருமுருகன் காந்தி உள்ளிட்ட சிலர் அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு வலுத்தது.

இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது ஜனநாயக ரீதியிலானது என்று மனு தாக்கல் செய்து ஒருவர் அனுமதியும் வாங்கிப் பெற்றுள்ள நிலையில், தங்களுக்கும் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உரிமையுள்ளது என்று பாஜக.,வினர் முழங்கி வருகின்றனர்.

எனவே, கருப்புக் கொடி காட்ட நினைக்கும் கருங்காலிகளுக்கு செருப்புக் கொடி காட்டுவோம் என மதுரை புறநகர் மாவட்ட பாஜக., தலைவர் சுசீந்திரன் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arikkai bjp - 2026

அந்த அறிக்கையில்….

கருப்புக் கொடி காட்டினால் செருப்பு கொடி! கருப்புக் கொடி காட்ட நினைப்பவர்களுக்கு மதுரை மக்களின் சார்பில் காவிப்படை பதில் சொல்லும்! மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் அறிக்கை! -என்று ஓர் அறிக்கை இன்று வெளியானது

மதுரைக்கு மக்களுக்கு உயர்தர சிகிச்சை மருத்துவ மையம் வழங்க வருகைதரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்று வாழ்த்தி அனுப்பும் நல்ல உள்ளங்களுக்கு அன்னை மீனாட்சி அருளால் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

மேலும் பாரதப் பிரதமர் மதுரைக்கு வருவதை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக் கொடி காட்ட நினைக்கும் கருங்காலிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு மதுரை மக்களின் சார்பாகவும் தக்க பதிலடி கொடுத்து அனுப்புவது மட்டுமல்லாமல் பின்வரும் காலங்களில் கருப்பு காட்ட நினைக்கும் சமூக விரோதிகளுக்கு செருப்புக் கொடி காட்டப்படும் என எச்சரிக்கின்றோம் – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!

1 thought on “கருப்பு கொடி காட்டினால்… செருப்புக் கொடிதான்! பதிலடி கொடுக்கும் பாஜக..!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.