December 5, 2025, 7:35 PM
26.7 C
Chennai

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

valmiki ramayan lavan kusan - 2025

உத்தரகாண்டம் வால்மீகி ராமாயணத்தின் பகுதியே!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

ராமாயணத்திற்குப் பல பழமையான பாஷ்யங்கள் உள்ளன. திலக பாஷ்யம், பூஷண பாஷ்யம் முதலானவை. இவையனைத்தும் உத்தரகாண்டத்தோடு சேர்த்தே சம்பூர்ணமாக உரை கூறியுள்ளன. பண்டைக் காலத்தில் உத்தர காண்டத்தைப் பிரித்துப் பேசவில்லை.

ஆனால் பிற்காலத்தில் அந்நியர்களின் முற்றுகையால் சம்பிரதாயங்களுக்கு எதிராக, ராமாயணத்தை ரிஷிகளின் படைப்பாகப் பார்க்காமல் வெறும் இலக்கியமாகப் பார்க்கத் தொடங்கிய பின்னர், பல ஆய்வுகள் செய்து வேறுபாடுகளும் விவாதங்களும் பெருகி விட்டன. உத்தர காண்டம் ராமாயணத்தோடு சேர்ந்ததல்ல என்று கூட சில காலமாக   சந்தேகம் எழுந்துள்ளது.

உத்தர காண்டம் ராமாயணத்தோடு சேர்ந்ததல்ல என்று கூறுவதால் சில சௌகர்யங்கள் உண்டு. சில அறிஞர்கள் இது குறித்துத் தீர்மானம் கூட செய்து விட்டனர்.  உத்தர காண்டம் இல்லாவிட்டால் சீதாவைத் துறப்பது இல்லை. ராமனின் மீது குற்றம் சுமத்த இயலாது. சம்பூக வதம் போன்ற சூட்சுமங்கள் பற்றிய வாதங்களோ விவாதங்களோ இருக்காது. ராமர் மேல் யாரும் விரலை நீட்டிக் குற்றம் சாட்ட முடியாது என்பதால் உத்தர காண்டம் ராமாயணத்தோடு சேர்ந்ததல்ல என்று கூறிச் சிலர் மகிழ்ச்சியடைகிறார்கள்.

அதற்காக யாரும் அதை விட்டுவிடுவதுமில்லை. திரைப்படங்கள், கதைகள், நாவல்கள் வடிவில் லவனையும் குசனையும் பற்றிக் கூற நினைக்கும் போது உத்தர காண்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அதிலிருக்கும் கதைகளால் வளர்ச்சி பெறுபவர் பலர் உள்ளனர்.

வட இந்தியர்கள் ராமாயணத்தை உத்தர காண்டத்தோடு சேர்த்தே பார்க்கிறார்கள், படிக்கிறார்கள். உத்தர காண்டம் ராமாயணத்தில் இல்லை என்று கூறுவதற்கோ, பிற்சேர்க்கை என்று கூறுவதற்கோ எந்த ஒரு ஆதாரமோ, பிரமாணமோ கிடைக்கவில்லை என்பதே உண்மை.

சிறிது காலமாகவே இது பற்றி விவாதங்கள் நடந்து வருவதால் சம்பிரதாயவாதிகளும் அறிஞர்களும் உத்தர காண்டம் ராமாயணத்தின் ஒரு பகுதியே என்று நிரூபித்துள்ளார்கள். அது எவ்விதத்தில் ராமாயணத்தின் பாகம் என்பதைப் பார்ப்போம்.

உத்தர ராமாயணம் என்ற பெயரைப் பிற்காலக் கவிஞர்கள் தம் நூலுக்கு வைத்தார்களே தவிர உத்தர காண்டம் என்பதே அதன் பெயர். பால காண்டத்தின் தொடக்கத்திலேயே வால்மீகி எப்படி ராமாயணம் எழுதினேன் என்று அவதாரிகையில் கூறுகிறார்.

சுலோகம்:

“சதுர்விம்சதி சஹஸ்ராணி ஸ்லோகானாமுக்த வான்ரிஷி:
ததா சர்க ஸதான் பஞ்ச ஷட் காண்டானி ததோத்தரம்”

(பாலகாண்டம், 4-2).

பொருள்: இருபத்து நான்காயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சர்க்கங்களும் கொண்ட ஆறு காண்டங்களையும், அப்படியே உத்தரகாண்டத்தையும் செய்தருளினார்.

இதில் தெளிவாக இருபத்து நான்காயிரம் சுலோகங்களும் ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் என்று இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார். நடந்து முடிந்த ராம  கதையை யுத்த காண்டம் வரை கூறிவிட்டு நடக்கப்போகும் இராமகதையை உத்தர காண்டத்தில் கூறுகிறார். அதற்காகத் தான் அவ்வாறு பிரித்துக் கூறுகிறார்.

சுலோகம்:

க்ருத்வாபி தன்மஹாப்ராஞ: சபவிஷ்யம் சஹோத்தரம்
சிந்தயாமாஸ கோன்வேதத் ப்ரயுஞ்ஜீயாதிதி ப்ரபு
(பாலகாண்டம், 4-3)

பொருள்: அறிவிற் சிறந்த மகாமுனிவர் நடக்கப் போவதைக் கூறும் உத்தர காண்டம் என்ற பெயரோடு கூடிய பகுதியைச் செய்தபின், “எந்த சமர்த்தன் இதைப் பிரசங்கம் செய்யப்  போகிறான்?” என்று ஆழ்ந்து சிந்தித்தார்.

சுலோகம்:

ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி:
சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ரபதமாத்மவான்”
. (பாலகாண்டம், 4-1)

இந்த சுலோகத்திலும், “ராமன் அரசைத் திரும்பப் பெற்று அரசாண்ட வரலாற்றை வால்மீகி முழுமையாக இயற்றினார்” என்று தெளிவாகக் கூறுகிறார்.

எல்லாவற்றையும் எவ்வாறு வால்மீயால் காண முடிந்தது? சாதாரண கவியாக இருந்தால் நடந்து முடிந்த சரித்திரத்தை நேரடியாகப் பார்த்தோ, பெரியவர்கள் கூறக் கேட்டோ எழுதிவிட முடியும். யோக நிலையில் தெய்வீகப் பார்வையால் பார்த்து தர்ம சொரூபரான வால்மீகி மகரிஷி இயற்றினார்.

வால்மீகி முனிவர் தர்ம சுபாவமும், யோக நிலையும் கொண்டவர். அவருடைய இயல்பு தவமியற்றுவது. யோகநிலை என்றால் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலை. அதன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல நடந்ததையும் நடக்கப் போவதையும் பார்த்ததாகக் கூறுகிறார்.

“நதே வாகந்ருதா காவ்யே” என்கிறார் பிரம்மதேவர். “உம்முடைய வாக்கில் ஒரு பொய் கூட வராது” என்று ராமாயணம் எழுதுவதற்கு முன்னரே பிரம்மா வால்மீகியிடம் கூறுகிறார்.

“ரஹஸ்யம் ச ப்ரகாசம் ச” என்கிறார் பிரம்மா. யாராவது எப்போதாவது ஒரு வரலாற்றை ஆராய்ந்து எழுதும் போது ரகசியத்தையோ பிரகாசத்தையோ யாரும் தெரித்து கொண்டு எழுத முடியாது. ரிஷிக்கு மட்டுமே அது சாத்தியம். வெளியில் தெரிவது, வெளியில் தெரியாதது என்று இரண்டு விஷயங்கள் உண்டு. ராமன் மானுடனாக வாழ்ந்தாலும் அவன் நாராயணனே என்பது ஒரு ரகசியம். அதற்குப் பின்னால் இருக்கும் தெய்வீகத் திட்டம் ஒரு ரகசியம்.

சுலோகம்:

“ஸ்வராஷ்ட்ர ரஞ்ஜனம் சைவ வைதேஹ்யாஸ்ச விசர்ஜனம்

பொருள்: தன் தேசத்து மக்களை சந்தோஷப்படுத்துவதற்காக வைதேஹியை  அகற்றியதைப் பற்றியும் காவியம் இயற்றினார்.

அனாகதம் ச யத் கிஞ்சித் ராமஸ்ய வசுதாதலே
தச்சகாரோத்தரே காவ்யே வால்மீகிர் பகவான் ரிஷி:” (பால காண்டம், 3-40)

பொருள்: பகவான் வால்மீகி முனிவர் ராமருடைய கதையில் பூமியில் இன்னும் நடக்காதது எது உள்ளதோ அது முழுவதையும் உத்தர காவியத்தில் இயற்றினார்.

பாலகாண்டத்தையும் சேர்த்து ராமாயணம் படிப்பவர்கள் யுத்தத் காண்டத்தோடு முடிந்துவிட்டது என்று எப்படிக் கூற முடியும்? ராமர் ராஜ்ஜியத்தில் மக்கள் நன்றாக வாழும் வண்ணம் ஆண்டு வந்தார் என்று கூறும் வால்மீகி, சீதையைத் துறந்ததும் இன்னும் எதெது நடக்கப் போகிறதோ அதையெல்லாம் உத்தர காண்டத்தில்  தெரிவிக்கிறார் என்று தெளிவாக உள்ளது.

இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் ராமாயணத்திற்கு உள்ளது என்பதை ஏற்கையில் உத்தரகாண்டத்தைச் சேர்த்தால்தான் அது இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் வரும் என்பதையும் ஏற்க வேண்டும்.

கோவில்களிலும் உற்சவங்களிலும், பண்டிகை தினங்களிலும் பிரவசனம் செய்யும் போது யுத்தகாண்டத்தோடு முடித்தால் போதும் என்பது சம்பிரதாயமாக உள்ளது.

பால காண்டத்தில் ராவண சம்ஹாரமே அவதார நோக்கம் என்று உள்ளதால் யுத்த காண்டத்தோடு வரலாறு முடிவதாக ஒரு வாதம் உள்ளது. உத்தரகாண்டத்தோடு சேர்த்து மொத்தமும் படிப்பது கடமை என்பது பெரியோர் கூற்று. இதில் ஐயமில்லை.

சுந்தரகாண்டம் வரை பாராயணம் செய்தால் போதும் என்ற சம்பிரதாயம் கூட உள்ளது. அப்படியென்றால் மீதி ராமாயணத்தைப் படிக்க வேண்டாம் என்று பொருளா? விசேஷங்கள், விரதங்களின் போது அது போல் சுத்தர காண்டம் வரை பாராயணம் செய்தால் போதும் என்று கூறினார்களே தவிர யுத்த காண்டத்தைப் படிக்கக் கூடாதென்று கூறவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். 

நவராத்திரி, ஸ்ரீராம நவமி, போன்ற பண்டிகைகளின் போது யுத்தகாண்டம் வரை பாராயணம் செய்யும்படிக் கூறியுள்ளார்கள். ராமாயணம் இருபத்து நான்காயிரம் சுலோகங்களோடு 108 முறை ஹோமம் செய்தவர்கள் உள்ளார்கள். காயத்ரி மந்திரத்தின் புரச்சரணையோடு என்ற தீர்மானமும் உள்ளது.

ராமாயணத்தை முழுமையாக அறிய வேண்டுமென்றால் உத்தரகாண்டமும் படிக்க வேண்டும் எனறு சம்பிரதாயவாதிகளான உரையாசிரியர்கள் அனைவரும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல. புராணங்களிலும் ராமாயணத்தின் சிறப்பு பேசப்படுகிறது. புராணங்களை சிலர் பிரமாணமல்ல என்று கூறுவது வருத்தத்திற்குரியது. அவர்களுக்கு அனுகூலமானவற்றைப் பிரமாணமாக ஏற்பதும் பிறவற்றை அங்கீகரிக்காமல் பிற்சேர்க்கை என்பது சரியல்ல.

ரிஷிகள் இயற்றிய நூல்களை முதலில் ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், இதிகாசங்கள் என்று முழுமையாகப் பார்க்க வேண்டும். ரிஷிகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறின்றி புகழ் பெற்றவை என்பதால் ராமாயணத்தைக் காவியமாகவும் மகாபாரதத்தை ஒரு கதையாகவும் பாகவதத்தை வெறும் நூலாகவும் பார்ப்பதென்பது  கோணலான பார்வை. சம்பிரதாயமான ரிஷிகளின் படைப்புகள் என்ற தொகுப்பில் இருந்து இவற்றைப் பிரித்துப் பார்ப்பது குற்றம். புராணங்களிலும் பிற சம்ஹிதை நூல்களிலும் ராமாயண பாராயணம் பற்றிக் கூறியுள்ளார்கள். அதில் உத்தரகாண்டத்தோடு சேர்த்தே பாராயணம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு காண்டத்திலும் ராமனை ஒவ்வொரு விதமாக தியானிக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் உள்ளது. ராமாயணத்தை வெறும் புத்தகமாகப் பார்க்காமல் ராமரின் சொரூபமாகவே கருதிப் பாராயணம் செய்யும் சம்பிரதாயவாதிகள் உத்தரகாண்டத்திற்கும் தியான சுலோகம் கூறியுள்ளார்கள். உத்தரகாண்டத்தைத் தனியாகப் பிரித்து பார்ப்பதென்பது பண்டைய காலத்தில் நிகழவில்லை என்பது தெளிவாகிறது.

சிறிது காலமாக நவீனம் என்று நினைத்தும், மேற்கத்தியவர்களின் ஆராய்ச்சி பார்வையில் இருந்தும் பார்ப்பவர்கள் மட்டுமே இப்படிப் பிரிக்கிறார்கள். இவர்த்கள் எத்தனை தூரத்திற்குப் போகிறார்கள் என்றால் ராமாயணத்தில் பாலகாண்டத்திலேயே சில பகுதிகளை பிற்சேர்க்கையாகவும் யுத்தகாண்டத்திலும் சில பகுதிகள் பிற்சேர்க்கை என்றும் கூற ஆரம்பித்துள்ளார்கள். எங்கெங்கெல்லாம் தெய்வீகம், விஷ்ணு தத்துவம் தென்படுகிறதோ அதையெல்லாம் பிற்சேர்க்கையாக எடுத்தெறிந்து திருப்திப்படுகிறார்கள்.

ஆனால் ராம பக்தர்கள் யாரும் அதை ஏற்கமாட்டார்கள். “இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் கொண்டது வால்மீகி ராமாயணம்” என்பது பிரசித்தியான வாக்கியம். ஆயிரம் சுலோகங்களுக்கு ஒரு சுலோகமாகத் தனியாக எடுத்து காயத்திரி ராமாயணமாகப் பாராயணம் செய்யும் முறை உள்ளது. சம்பிரதாயத்தை நம்புபவர்கள் உத்தரராமாயணத்தைத் துண்டாடுவதை விரும்பமாட்டார்கள்.

சுலோகங்களின் நடையில் வேறுபாடு உள்ளது என்று கூறுபவரும் உள்ளார்கள். “ததா உத்தரம்” என்று வால்மீகி கூறியபடி நடக்க இருக்கும் எதிர்கால விஷயங்களை வேறு நடையில் எழுதியிருக்கலாம். அது அவருடைய கவிச் சிறப்புக்கு உதாரணம். உத்தரகாண்டத்தின் நிறைய சுலோகங்கள் யுத்த காண்டத்தோடு தொடர்புடையவையாகவே உள்ளதைப் பார்க்க முடிகிறது.

உத்தரகாண்டம் ராமாயணத்தோடு சேர்ந்தது அல்ல என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டரேட் வாங்குகிறார்களாம். சம்பிரதாயத்திலிருந்து நழுவிய எழுத்துக்களுக்கு வெகுமதி கொடுப்பதற்கு பாரத தேசத்தில் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் பார்க்கிறோம். இங்கு ‘புரஸ்காரம்’ வாங்கலாமே தவிர, அது ‘பகவத் திரஸ்காரத்தையே பெற்றுத் தரும் என்பதை மறவலாகாது.

ராமனை தெய்வமாக வழிபடுபம் பக்தர்கள் மிகப் பலர். ராமாவதாரத்தின் முடிவை அறியாவிட்டால் முழுமை எப்படிக் கிடைக்கும்? பாகவதத்தில் கிருஷ்ணாவதாரத்தின் முடிவு உள்ளது. உத்தர காண்டம் இல்லாவிட்டால் ராமாவதாரத்தின் முடிவை எவ்வாறு அறிய முடியும்?

பல ராமாயாணங்கள் எழுதப்பட்டுள்ள`ன. அத்யாத்ம ராமாயணம் போன்றவை உள்ளன. எல்லாவற்றிலும் சீதையைத் துறப்பதும் ராமாவதார முடிவும் கூறப்பட்டுள்ளன. பாகவதம் நவம ஸ்கந்தத்திலும் உள்ளது. பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பத்ம புராணம் என்று எல்லா புராணங்களில் இருந்தும் எடுத்துக் காட்டி வாதிப்பவர்கள் புராணங்களை பிரமாணமல்ல என்று கூறும் விந்தையையும் நாம் பார்க்கிறோம்.

“யார் உத்தரகாண்டத்தை பக்தி சிரத்தையோடு கேட்பார்களோ அவர்களுக்கு ராமரின் பிரசாதத்தால் சர்வ ஸித்திகளும் கிடைக்கும்”. (சிரத்தை என்றால் சத்தியப் பார்வை சத்தியத்தின் மீதுள்ள நம்பிக்கை). 

உத்தரகாண்டத்தைத் தனியாகப் பிரவசனம் செய்வதானால், உத்தரகாண்டத்தைக் கூறி முடித்த பின் ராமாயணத்தை முதலில் இருந்து ஆரம்பித்து சீதா கல்யாணம் வரை படிக்க வேண்டும் என்று சம்பிரதாயம் தெரிவிக்கிறது. தனியாக உத்தரகாண்டத்தை மட்டுமே பிரவசனம் செய்யக் கூடாதென்று பெரியோர் கூறியுள்ளார்கள்.

காயத்ரி மந்திரத்தின் 22, 23, 24 என்ற மூன்று எழுத்துக்களோடு தொடங்கும் சுலோகங்கள் உத்தரகாண்டத்தில் உள்ளன. உத்தரகாண்டம் இல்லாவிட்டால் காயத்ரி மந்திரத்தின் மூன்று அட்சரங்கள் ராமாயணத்தில் இருக்காது. இத்தனை பிரமாணங்கள் உள்ளன.

ஸ்காந்த புராணத்தில் ஏழு காண்டங்களோடு கூடிய ராமாயணம் ஏழு வித பலன்களை அளிக்கிறது என்ற குறிப்பு உள்ளது. மகா கவிகள் உத்தர காண்டத்தைக் கொண்டு பல காவியங்களை எழுதி உள்ளார்கள். சமஸ்கிருதத்தில் நாடகமாக பவபூதி எழுதிய உத்தர ராம சரிதம் மிகச் சிறந்த சமஸ்கிருத இலக்கியமாகப் புகழ் பெற்றுள்ளது.

தெலுங்கில் ‘திக்கனா’ எழுதிய உத்தர ராமாயணத்தில் ஒரு வசனம் கூட கிடையாது. முழுக்க செய்யுட்களால் எழுதியுள்ளார். ‘கன்டண்டி பாப்பராஜு’ என்பவர் வேணுகோபால சுவாமி  உபாசகர். மிக மதுரமான உத்தர ராமாயணத்தைத் தெலுங்கில் படைத்துள்ளார்.

உத்தரம் என்றால் ‘பிறகு’ என்று பொருள். பிறவற்றோடு ஒப்பிடும் போது இது உயர்ந்தது  என்று குறிப்பதற்காக ‘உத்தரம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். யுத்த காண்டம்  வரை படிப்பவருக்கு பல சந்தேகங்கள் வருவது இயல்பு. அவற்றுக்கெல்லாம் உத்தர காண்டத்தில் பதில் கிடைக்கிறது.

அனுமனை சபையில் பார்த்ததும், ராவணனுக்கு, “என்னை அன்றொரு நாள் சபித்த நந்தீஸ்வரர் நினைவுக்கு வருகிறாரே. அவரே இந்த வடிவில் வந்தாரா?” என்று எண்ணினானாம். எப்போது நந்தி ராவணனை சபித்தார் என்பது உத்தரகாண்டம் படித்தால்தான் தெரிய வரும்.

ராவணன் எத்தனை சிறந்தவன் என்று கூறியிருந்தாலும் அவனுடைய வரலாறு என்ன? எதனால் அத்தனை பலம்? எப்படி அத்தனை வரங்களைப் பெற்றான்? என்பதெல்லாம் உத்தர காண்டம் இல்லாவிட்டால் தெரிய வராது. அனுமன் ஒருமுறை, “நீ இத்தனை வரங்களைப் பெற்றுள்ளாய். உனக்குச் சமமான தேவர், அரக்கர் யாரிடமிருந்தும் உனக்குத் தோல்வியில்லை. ஆனால் மனிதரைப் பற்றி அதில் கூறப்படவில்லை” என்கிறார். வரமளித்தவர் யார்? அந்த வரம் என்ன? என்பது உத்தர காண்டம் படித்தால்தான் தெரியவரும்.

பால காண்டம் நான்காவது சர்க்கத்தில் “ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய” என்ற சுலோகம் உள்ளது. உத்தர காண்டத்தில் முதல் சுலோகமாகவும் அதன் முதல் பகுதியே உள்ளது.

“ராமர் ராஜ்ஜியத்தைப் பெற்ற பின்” என்று தொடங்கி, ராமாயணத்தின் தொடர்ச்சியாக எத்தனை அழகாக எழுதியுள்ளார் பாருங்கள். நடையில் சிறிது வேறுபாடு இருப்பதை இலக்கியச் சுவையாகக் கருத வேண்டும்.

லவனும் குசனும் நைமிசாரண்யத்தில் அஸ்வமேத யாக சபையில் உத்தர காண்டத்தோடு கூடிய ராமாயணத்தை வால்மீகி இயற்றினார் என்று ராமரிடம் கூறுகின்றனர்.

சுலோகம்:

“சம்நிபத்தம் ஹி ஸ்லோகானாம் சதுர்விம்சத் சஹஸ்ரகம்
உபாக்யான சதம் சைவ பார்கவேண தபஸ்வினா”
(உத்தர காண்டம், 94-25).

“தபஸ்வியான பிருகு வம்சத்தைச் சேர்ந்த வால்மீகி முனிவர் இருபத்து நான்காயிரம் சுலோகங்களோடும் பலப்பல உபகதைகளோடும் முற்றிலுமாக இயற்றியுள்ளார். அரசரே,  முதலிலிருந்து ஐந்நூறு சர்க்கங்கள் அடங்கிய ஆறு காண்டங்கள் இதுவரை நடந்ததைக் கூறுகின்றன. அந்த காண்டங்களுக்கு மேல், இனி நடக்க இருப்பதைக் கூறும் உத்தரம் என்னும் கடைசி காண்டமும் செய்து முடிக்கப் பட்டுள்ளது. ராஜா, இவ்வுலகில் இருக்கும் ஆயுட்காலம் எவ்வளவோ அதற்கும் மற்றும் எல்லாவற்றுக்கும் பிரமாணமாக இந்தக்  காவியம் விளங்குகிறது. ராஜா, தாங்கள் செவிசாய்க்க விரும்புவதால் யாகத்தின் இடையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தம்பிமார்களோடு கேட்டருளுங்கள்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர். ஸ்ரீ ராமரும், “அப்படியே செய்க” என்று ஆணையிட்டார்.

சர்வம் ஸ்ரீ சீதா ராமார்ப்பணம்ஸ்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories