காரமடை கோயில் சீர்கேட்டை கண்டித்து போராடியவர்! கைது செய்ய ஷூ காலுடன் கோயிலுள் புகுந்த போலீஸ்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
karamadai ranganathar temple3 - 2026

கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது காரமடை அரங்கநாதர் கோயில். இங்குள்ள வனவாழ் மக்களின் குலதெய்வமாகத் திகழும் கோயிலில் மாசித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இதில் நடைபெறும் தேர்த் திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரம் பேர் திரள்வது வாடிக்கை.

காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடக்கும் சீர்கேட்டை கண்டித்து பக்தர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், கோவில் அலுவலகத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த ரவிபாரதி என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

karamadai ranganathar temple - 2026

அப்போது அவரைக் கைது செய்வதற்காக கோயிலுள் நுழைந்த போலீஸ்காரர் ஒருவர் ஷூ அணிந்து உள்ளே சென்றது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.