வீரமரணம் அடைந்த சுப்ரமணியன் குடும்பத்தாரை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்!

Published:

subramanian crpf - 2026

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், கடந்த 14ஆம் தேதி நடத்த வெடிகுண்டு தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியன் வீரமரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் முழு அரசு மரியாதையுடம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு கனிமொழியுடன் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுப்பிரமணியனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சுப்பிரமணியனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தாரிடம் இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் ஒருவரான, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தா.பழூர் கார்குடி கிராமத்தைச் சார்ந்த சிவச்சந்திரன் அவர்களின் இல்லத்துக்கு, நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

மேலும், கழகத்தின் சார்பில் ரூ 2 இலட்சம் நிதியுதவியை சிவச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினேன்.

பின்னர், தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக சமூக நீதி மாநாட்டிலும், திருச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழேந்தல் தலைவர் கலைஞர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்துகிற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன்.

Related articles

Recent articles

spot_img