நெல்லை ஆட்சியரகத்தில் பரபரப்பு! மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு… மூதாட்டி…!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

tenkasi lady nellai collectorate rescued - 2026

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை மனு நீதி நாளின் போது திடீரென ஒரு மூதாட்டி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியைச் சேர்ந்த ராசம்மாள் என்ற மூதாட்டி தனது வீட்டை அபகரித்துக் கொண்டவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி மனு அளித்தார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் இருந்த போலீஸார் அவரைக் காப்பாற்றினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.