சென்னை வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

anwarrajamp - 2026

சென்னை: சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வக்ஃபு வாரிய தலைவரும் எம்பியுமான அன்வர் ராஜா அலுவலகத்தில் உள்ளார். அன்வர் ராஜாவிடமும் விசாரணை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு நடந்து வருகிறது. மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இதன்படி இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது. ராமநாதபுரம் எம்.பி.,யும், வக்பு வாரிய தலைவருமான அன்வர் ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முதல் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக வக்பு வாரியத்தில் சோதனை நடப்பதாக தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.