பாஜக.,வுக்கு பிரசாரம் செய்வேன்…! தமிழிசைக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்! : நடிகர் விசு!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்

visu - 2026

  • நடிகரும் இயக்குநருமான விசு, `கட்சியில் உறுப்பினராகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒருமுறைகூட தமிழிசையை சந்திக்க முடியவில்லை. என்னாலேயே முடியவில்லை எனில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அவரை சந்திக்க முடியும்.  பா.ஜ.கவை ஆதரித்து பிரசாரம் செய்வேன். அது தமிழிசைக்காக அல்ல. மோடிக்காகவும், பொன். ராதாகிருஷ்ணனுக்காகவும்’ என்று கூறினார் விசு!

“நான் சத்தியத்துக்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டவன் என்பதால் பா.ஜ.க-வில் இணைந்தேன். கட்சியில் உறுப்பினராகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒருமுறைகூட கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசையை சந்திக்க முடியவில்லை.

இந்தச் சூழலில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு என்னை அழைத்தார்கள். தெரிந்தோ தெரியாமலோ நான் ஒரு பிரபலமாக இருக்கிறேன். என்னாலேயே தமிழிசையைச் சந்திக்க முடியவில்லை எனில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அவரை சந்திக்க முடியும். எந்த நம்பிக்கையில் அவரை ஆதரித்து என்னால் பிரசாரம் செய்ய இயலும்.

ஆனால், பா.ஜ.கவை ஆதரித்து பிரசாரம் செய்வேன். அது தமிழிசைக்காக அல்ல. நாடு நல்ல திசையை நோக்கி சென்றுகொண்டிருப்பதற்கு காரணகர்த்தாவாக இருக்கக்கூடிய மோடிக்காகவும், வாழும் காமராஜர் பொன். ராதாகிருஷ்ணனுக்காகவும் பிரசாரம் செய்வேன். தர்மம் வெல்லும். தர்மமே வெல்லும்.. என்று கூறியுள்ளார் விசு.

கட்சியின் உறுப்பினர் அளவில் உள்ள நடிகர் விசு, கட்சியின் மாநிலத் தலைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளது விநோதம் என்று சிலரும், கட்சியை எந்த அளவுக்கு வைத்திருக்கிறார் என்ற கருத்தில் சிலரும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

–

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.