அதி தீவிர காற்றழுத்தத் தாழ்வில் இருந்து இன்று புயலாக மாறியது… ஃபோனி புயல்!

Published:

balachandran - 2026

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில், வியாழக்கிழமை அன்று, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிரமடைந்து வெள்ளிக்கிழமை நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில் சனிக்கிழமை இன்று அது புயலாக உருவெடுத்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இது குறித்துக் கூறியபோது,

இந்தப் புதிய புயல் சின்னத்திற்கு வங்கதேசம் தேர்வு செய்துள்ள ஃபோனி என்ற பெயர் சூட்டப்பட்டிருக்இகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல், சென்னையிலிருந்து தென்கிழக்கே 1250 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது.

புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமான புயலாக மாறும்! இந்த ஃபோனி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் வடக்கு கடலோர பகுதிகள் ஆந்திர மாநிலத்தின் தெற்கு பகுதிகளை நோக்கி, செவ்வாய்க்கிழமை மாலை நெருங்கும்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் புயல் கரையைக் கடக்க வாய்ப்பில்லை! சென்னைக்கு அருகே 200 அல்லது 300 கி.மீ., தொலைவில் நெருங்கி வரக்கூடும்!

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் … இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறினார்.

Related articles

Recent articles

spot_img