December 5, 2025, 4:21 PM
27.9 C
Chennai

இலங்கை வழியே இந்தியாவுக்கு..! இறுகும் பிடி!

FB IMG 1556341876725 - 2025

இலங்கையில் தேடுதல் வேட்டை தீவிரமாகின்றது அதே நேரம் கையெறி குண்டு முதலான ஆயுதங்களுடன் கைது செய்யவ் படுபவர்களும் அதிகரிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் பக்கம் சில இஸ்லாமியர் நடமாட்டம் சந்தேக கண்ணோடு விசாரிக்கப் படுகின்றது, அவர்கள் தாக்குதல் நடத்த வந்தவர்கள் அல்ல; மாறாக இந்தியாவுக்கு தப்ப வந்திருக்கலாம் என்கின்றார்கள்!

இலங்கை அரசு தேடும் தீவிரவாதிகளில் சில பெண்களும் இருக்கலாம்!  ஆம் தலைமன்னார் வந்துவிட்டால் 30 நிமிடங்களில் இந்தியா வந்துவிடலாம்!

பாம்பு புற்றை இடிக்க ஆரம்பித்துவிட்டது இலங்கை, தப்பும் விஷ பாம்புகளுக்கு எங்கே புற்று இருக்கும் என தெரியும் அல்லவா? பாம்பின் கால் பாம்பறியும்!  அப்படி தமிழகத்து பாம்பு கூடாரங்களுக்கு அவை படையெடுக்கலாம் என்பதால் இந்திய கடல் எல்லை முழு வீச்சில் கண்காணிக்கப் படுகின்றது!

srilanka suicide6 - 2025உளவு விமானம் கப்பல் இன்னும் நவீன கருவிகளோடு கடலில் கண் சிவக்க உச்சகட்ட பாதுகாப்போடு நிற்கின்றது இந்தியா.  எங்கே?

தமிழக மீனவர்களை காக்கவில்லை இன்னும் பலரை காக்கவில்லை என இந்த தமிழக அரசியல்வாதிகள் ஒப்பாரி வைப்பார்கள் அல்லவா? அதே எல்லையில்! ஆம் இந்த படுபயங்கர ஆபத்தான நேரத்தில் தமிழகத்துக்கு தக்க பாதுகாப்பினை வழங்குகின்றது இந்திய அரசு!

இதைத்தான் முதலிலே சொன்னோம் மீனவர் சிக்கல் வேறு, பாதுகாப்பு என்பது வேறு, பாதுகாப்பில் அரசை துளியும் கைகாட்ட முடியாது! உலகில் வரும் செய்திகளில் இந்திய உளவுதுறைக்கு மவுசு கூடுகின்றது! சில மாதங்களுக்கு முன்பே இவர்களோடு தொடர்புடையவனை அமுக்கி மிதித்து விஷயங்களை கறந்தது!

srilanka suicide5 - 2025ஆம் யாரை கைது செய்தார்கள் என்றால் இன்று தலைமறைவாக இருக்கும் அந்த தவுபிக் அமைப்பின் தலைவனுக்கு பயிற்சி கொடுத்தவனையே அமுக்கியது ரா!

அவனே நடக்கப் போகும் விபரீதத்தைச் சொன்னான், யார் யார் இலங்கையில் திட்டமிடுகின்றார்கள் என அவன் சொன்னதை அறிக்கை அனுப்பி இலங்கை அரசை எச்சரித்திரிக்கின்றது ரா !

யாரின் பெயர்கள் என்றால் இன்று ஐ.எஸ் அறிவித்திருக்கும் அதே பெயர்கள்! அந்த அளவு துல்லியமாக விஷயத்தை அறிந்திருக்கின்றது ரா..!

ஐஎஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது என பொறுப்பேற்றாலும் ஸ்ரீலங்கா தௌபிக் ஜமாஅத் எனும் தன் நண்பர்கள் மூலமே செய்திருக்கின்றது அல்லது ஐ.எஸ் அமைப்பிடம் சிலர் மூலமாக வெடிபொருள் பெற்று இவர்கள் செய்திருக்கின்றார்கள்!

யாரை எங்கு பிடித்தீர்கள், எங்கு வைத்திருக்கின்றீர்கள், இவர்கள் எங்கு பயிற்சி பெற்றார்கள் என ராவிடம் கேட்டால் அது சொல்லவேண்டிய விஷயமுமல்ல, அது அவசியமுமல்ல என மௌன சிரிப்பு சிரிக்கின்றது ரா .

srilanka suicide4 - 2025ஆம் இலங்கை காட்சியின் மிக முக்கிய துருப்பு சீட்டான அந்தப் பயிற்சியாளர் ராவின் பிடியில்தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன ! ஆனால் ரா உடனே ஒப்புக் கொள்ளாது அவனை கொடுக்கவும் செய்யாது! ஏன் என்றால் அப்படித்தான், அதுதான் உளவு அமைப்புகள்!

இலங்கையில் பாம்புப் புற்றில் கைவைத்தாகி விட்டது, தப்பும் பாம்புகளை இங்கே உள்ளே விடாதபடி இந்திய படைகள் காவல் இருக்கின்றன‌!  தமிழரும் அப்படியே கொஞ்சம் உஷாராக இருத்தல் வேண்டும்!

இங்கு திராவிடம் பெரியாரியம் அம்பேத்கரியம் தலித்தியம் சாதியம் இன்னும் ஏராளமான இம்சை இசங்கள் உண்டு! அவைகளால் இந்த இடத்தில் துளியும் பிரயோசனமில்லை, ஏகபட்ட கட்சிகளும் இம்சைகளும் இருக்கலாம்!

ஆனால் அவை எல்லாம் நம்மை காக்காது, இது உலகளாவிய சிக்கல்! இந்திய பாதுகாப்பு அமைப்பும் அதன் அதிகாரிகளும் வீரர்களும் அரசுமே நம்மை காக்கமுடியும், அவர்களுக்கு நம் ஒத்துழைப்பும் அவசியம்

  • ராஜா சங்கர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories