சந்தேகப்பட்ட கணவனை கொன்ற மனைவி..!

murder - 2026சந்தேகப்பட்ட கணவனை கொன்ற மனைவி..!

புதுவை நெல்லித்தோப்பு பகுதியல் உள்ள கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). லாரி டிரைவர். புதுவை 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கமலக்கண்ணன் உடல் சாக்குமூட்டையில் பிணமாக கிடந்தது.

இது பற்றி தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் கமலக்கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கமலக்கண்ணனின் மனைவி ஸ்டெல்லா என்பவர் கணவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் ஸ்டெல்லா தனது சகோதரி ரெஜினா மற்றும் ரவுடி தமிழ்மணி உதவியுடன் கமலக்கண்ணனை கொலை செய்து அவரத உடலை கழிவுநீர் வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டெல்லாவை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து கைதான ஸ்டெல்லா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நான் சில ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசி வந்தேன். இது கணவருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் என்னிடம் குடித்து விட்டு வந்து அடிக்கடி தகராறு செய்து, அடித்து சித்ரவதை செய்து அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே நான் அவரை கொலை செய்து விடுவது என தீா்மானித்தேன் எனது திட்டம் குறித்து பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த எனது சகோதரி ரெஜினாவிடம் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். நாங்கள் திட்டமிட்டபடி கடந்த 4–ந் தேதி பிள்ளைச்சாவடிக்கு எனது கணவரை வரவழைத்தோம். அங்கு ரெஜினாவின் வீட்டில் வைத்து எனது கணவருக்கு பழச்சாறில் வி‌ஷம் கலந்து கொடுத்தேன். அதனை குடித்த உடன் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை பெரியார் நகரில் உள்ள எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தோம்.

அங்கு, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அப்படியே விட்டால் உயிர் பிழைத்து விடுவார் என்று நினைத்தோம். இதுபற்றி ரெஜினா அவரது நண்பரான சக்தி நகரை சேர்ந்த ரவுடி தமிழ்மணியை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். உடனே அவர் அங்கு வந்தார்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பின்னர் நானும், ரெஜினாவும், எனது கணவரின் இருகைகளை பிடித்துக்கொண்டோம். தமிழ்மணி அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை அங்கேயே விட்டு விட்டு நாங்கள் பிள்ளைச்சாவடி சென்று விட்டோம். மறுநாள் 5–ம் தேதி நள்ளிரவு தமிழ்மணி அவரது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து கணவரின் உடலை சாக்குமூட்டையில் கட்டி ஸ்கூட்டரில் கொண்டு சென்று போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்றார். பின்னர் எதுவுமே தெரியாதது போல நானும் இருந்தேன். போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய ரெஜினா, ரவுடி தமிழ்மணி மற்றும் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சந்தேகப்பட்ட கணவனை மனைவியே கொலை செய்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories