செந்தில் பாலாஜியிடம் இருந்து கடத்தப்பட்ட எனது மகனையும் சொத்துகளையும் மீட்டு தாங்க… தாய் கண்ணீர்!

Published:

karur complaint against senthilbalaji 682 e1557501328818 - 2026

கரூரைக் கலக்கி வரும் முன்னாள் அமைச்சருக்கு மேலும் ஒரு வழக்கு, … தற்போது தான் குட்கா வழக்கில் சிக்க இருக்கும் நிலையில் ஆட்கடத்தல் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் சிக்குகின்றார் – செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி

ரூ 25 கோடி மதிப்பிலான சொத்திற்காக என் மகனை கடத்தியதோடு, தற்போது வழக்கு விசாரணைக்கு வருவதினால் என்னையும் என் உறவினர்களையும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி மிரட்டுவதாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்

தனது மகனை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி மற்றும் அவரது அடியாட்களும் தான் கடத்தி சென்று இருப்பார்கள் அவர்களை மீட்டு தரவேண்டும் என்று கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மகனின் தாயார் கண்ணீருடன் பேட்டி.அளித்தார்.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். மனைவி தெய்வானை. வயது 62. இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் கோகுல் என்ற ஆண் பிள்ளையை சிறுவயதிலே தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ராமலிங்கம் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு விவசாய தோட்டம் காலியிடம் என 25 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது அடியாட்கள் கோகுலை கடத்திச் சென்று, அவர்களது குடும்ப சொத்தை எழுதி வாங்கியதாக அப்போது புகார் எழுந்தது.

இது தொடர்பாக கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் வழக்கு தொடக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தற்போது இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது கோகுல் வாக்குமூலம் அளித்தால் அது செந்தில் பாலாஜிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிகிறது. கோகுல் கடந்த சில வருடங்களாக கோவையில் தங்கி பணியாற்றி வருகிறார் அவரது மனைவி மகனும் அங்கேயே உடன் உள்ளனர்.

இதனிடையே தனது தாயாரைப் பார்க்க கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி கரூருக்கு வந்து விட்டு சென்றவர் அதன்பின் மாயமாகி விட்டார். இது தொடர்பாக கரூரில் உள்ள வெங்கமேடு காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என தெய்வானை புகார் அளித்தார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

இந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த ஆறாம் தேதி ஆட்கொணர்வு மனு மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையின்போது தனக்கு எதிராக சாட்சியமளித்தால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி செந்தில் பாலாஜியும் அவரது அடியாட்களும் தான் தனது மகனை கடத்தி வைத்திருக்கக்கூடும். எனவே எனது மகனையும் எனது சொத்தையும் மீட்டுத்தர வேண்டும்… என கண்ணீர் மல்க அவரது வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெய்வானை தெரிவித்தார்.

ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சரின் உறவினர் கொங்கு மெஸ் சுப்பிரமணி என்பவர் குட்கா வழக்கில் சிக்கிய நிலையில் போலீஸுக்கும், நீதிமன்றத்திற்கும் டாட்டா காட்டி வந்த நிலையில் குட்கா செந்தில் பாலாஜி என்ற பெயர் எடுத்த நிலையில் தற்போது ஆட்கடத்தல் வழக்கு மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்கிலும் சிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஏற்கெனவே அதிமுகவில் இருந்ததால் தான் அமைதியாக இருந்ததாகவும், தற்போது தி.மு.கவுக்கு வந்திருக்கின்றோம் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம் என்று ஆங்காங்கே மிரட்டி வருகின்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img