
திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் வரகனுார் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் ஆலை வெடித்துச் சிதறி 6 தொழிலாளா்கள் இறந்தனர். அதில் பலர் உடல் கருகியும், படுகாயமுற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
.
இதனை தொடர்ந்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சியான தகவல் நெஞ்சை பதற வைக்கிறது
மூடி சீல் வைக்கப்பட்டுள்ள அந்த ஆலையின் ஒரு பகுதி கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இன்று காலை வெடித்து சிதறியதில் ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் இருந்த மாங்குடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளா்களான கோபால், கனகராஜ், அர்ஜீன். குருசாமி, காமராசர் ஆகியோர் பாிதாபமாக இறந்து விட்டனா்.
இதில் அர்ஜீன் 17வயது பள்ளி மாணவன் என்பதும், கோடை விடுமுறையில் குடும்பத்தின் வறுமை காரணமாக வேலைக்கு வந்தவர் என்பது மிகவும் வருத்தமான விஷயமாக உள்ளது.
பட்டாசு ஆலையை மூடி சீல் வைப்பதற்கு முன்பு ஆபத்தான பட்டாசுகளோ, இரசாயனக் கலவைகளோ வெடித்ததால் உயிர் சேதம் ஏற்படுத்தும் பொருட்களோ, ஆலை வளாகத்தில் இல்லை என்பதை அரசு நிர்வாகமும சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் உறுதிபடுத்தாது ஏன்? குறைந்தபட்சம் ஆலைக்குள் ஆபத்தான பொருட்கள் உள்ளது. என்பதைக்கூட அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தாது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.
அப்பாவி தொழிலாளாகள் ஐந்துபேரின் உயிர் இழப்பிற்கு காரணமான தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் பொறுப்பற்ற போக்கினை கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இதற்கு காரணமான துறை அதிகாரிகள், அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆலையை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து எஞ்சி இருக்கின்ற ஆபத்தான பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்
எனவும் இறந்த தொழிலாளிகள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.



