திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

arrested - 2026

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டி பனியன் கம்பெனியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி பலர் வேலை செய்து வந்தனர்.

ஆனால், இவர்களில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியிருந்து வருவதாக வேலம்பாளையம்
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து பனியன் கம்பெனி ஊழியர்கள் 19 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸார் விசாரணை நடத்துவதை அறிந்த அவர்களில் சிலர், உடனே தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் பல நாட்கள் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.