
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பொறியாளா் ஒருவர், ரம்மி விளையாட்டை தடைசெய்யக்கோரி கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக ஆன் லையன் ரம்மி விளையாட்டு அதிகரி்த்து அதனால் ஏற்படும் உயிரழப்புகளும் கூடிக்கொண்டே வருகிறது.
சமீபத்தில் மதுரை அருகே கணவன்,மனைவி இருவரும் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பத்தை அடுத்த தற்போது தாய், மகன் தற்கொலை செய்து கொண்டது. அதிர்ச்சியடை வைத்துள்ளது.
கடலுார் மாவட்டம் பண்ருட்டியை அருகே உள்ள மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் அருள்வேல் இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை செய்து வருகிறார்.
இவரும் மாதம் சுமார் ஓரு லட்சம் வரையில் சம்பளம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அருள்வேலுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்து வந்தாக தெரிகிறது.
தொடக்கத்தில் சிறு தொகையை கட்டி ரம்மி விளையாடி உள்ளார். ஆரம்பத்தில் தொடா்ந்து வெற்றி மேல் வெற்றி கிடைத்து அதிகளவு பணம் கிடைத்து வந்துள்ளது.
இதனால் தன் கைவசம் உள்ள பணம் முழுவதையும் செலுத்தி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
முதலில் அதிக வெற்றிகளை பெற்று வந்த அருள்வேலுக்கு நாட்கள் செல்ல, செல்ல ஆன்லைன் ரம்மி தன்து கோர முகத்தை காட்ட துவங்கி உள்ளது.
பணத்தை முழுவது இழக்க தொடங்கிய அருள்வேல், ஆன்லைன் ரம்மிக்கு முழுதும் அடிமையாகியுள்ளார்.
இருந்தாலும் நாம் திறமையாக விளையாடினால் கைவிட்டு போன பணத்தை மீட்டு எடுத்திடலாம் என நினைத்து அதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களிடம் சிறுக, சிறுக கடன்களை வாங்கி அதை வைத்து ரம்மி விளையாடி உள்ளார்.
ஆனால் அருள்வேல் நினைத்தபடி வெற்றி கிடைக்காமல் தோல்வியடைந்து பணம் முழுவதையும் இழந்துள்ளார்.
மேலும் ரம்மி விளையாட்டில் தீவிரம் காட்டிய அருள்வேல் வேலையில் கவனத்தை குறைக்க தொடங்கியதால் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வேலையும் பறிபோனது.
இந்நிலையில் செய்வதறியாது திகைத்த அருள்வேல், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றுவிட்டார்.
ஆனால் கடன் கொடுத்த நபர்கள் வீட்டிற்கு வந்து பணத்தை திரும்பத் தர வேண்டுமென நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அருள்வேலையும், அவரது தாயார் ராஜலட்சமியையும் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
நிலைமை கையை மீறி சென்றதாக நினைத்து இருவரும், வீட்டில் யாரும் இல்லாத நிலையிலி் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் ராஜலட்சுமி எழுதிய கடிதத்தின் மூலம் தற்கொலை தொடர்பாக விபரங்கள் தெரியவந்தாக கூறப்படுகிறது.
ஆன்லைனில் உள்ள சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பு மேற்கொண்டு அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



