தமிழகத்திற்கு இந்தி மொழி கொண்டுவரப்பட்டால் தி.மு.க., அதனை கட்டாயம் எதிர்க்கும் என்று அக்கட்சியின் லோக்சபா குழு துணைத்தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், 480 பக்க புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை மீது வரும் ஜூன் 30 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
அந்த வரைவு அறிக்கையில், இந்தி மொழி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில், ஆங்கிலத்துடன் இணைத்து இந்தியும் ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரப்படவேண்டும் என்று முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து இன்று ஜூன் 1 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ” மத்திய அரசு, தமிழகத்திற்கு இந்தி மொழியை கொண்டுவந்தால், அதை கட்டாயம் தி.மு.க., எதிர்க்கும்,” என்று கூறினார்.



