பிரதமரை வழிமொழியும் வாய்ப்பு வழங்கிய பாஜக.,வுக்கு அதிமுக நன்றி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
aiadmk interview - 2026
File pic..

இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் காலை நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதன்படி…

உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்ற உறுதியேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது.

மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர பட்டது.

நாட்டின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவிற்கு பாஜக வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது.

முன்னதாக ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம்: ஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும்; தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது. என்று கலைச்செல்வன் கூறினார்

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.

எம்.பி., எம்.எல்.ஏக்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது ..

உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப் பட்டது.

இதற்கு முன் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசுவதை தடை செய்திருந்தனர்.

மீறி கருத்து தெரிவிப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அதிமுக எச்சரிக்கை விடுத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.