வேதாரண்யம் அருகே மருதூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரிசெய்யப் பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குடிநீர் வழங்க கொள்ளிடத்திலிருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் கூட்டுகுடிநீர் திட்ட குழாய் செல்லும் மருதூர் இரட்டைகடையடி பாலம் வழியாக செல்கிறது
இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் இது வரையிலும் சரி செய்யப்பட வில்லை.
குடிநீர் தட்டுபாட்டால் மக்கள் சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி மானங்கொண்டான் ஆற்றில் செல்கிறது. இதனால் மருதூரிலிருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதியில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது!
இந்த நிலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் இந்த நேரத்தில் மருதூர் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!





கà¯à®Ÿà®¿à®¨à¯€à®°à¯ வடிகால௠கà¯à®´à®¾à®¯à¯à®•ளில௠இஙà¯à®•à¯à®®à®Ÿà¯à®Ÿà¯à®®à®²à¯à®², பல ஊரà¯à®•ளிலà¯à®®à¯ உடைபà¯à®ªà¯ உளà¯à®³à®¤à¯, அதிகாரிகளின௠அலடà¯à®šà®¿à®¯à®ªà¯à®ªà¯‹à®•à¯à®•ால௠தணà¯à®£à¯€à®°à¯ virayamakirathu.