ரத்தவெறி பிடித்த ‘சர்ச்’ கைக்கூலிகள்! மதமாற்றத்தை தடுத்த இளைஞருக்கு அடி உதை!

Published:

cross blood stained1 - 2026

ஹிந்துச் சிறுவர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற மேற்கொண்ட சர்ச்சின் முயற்சியைத் தடுத்த இளைஞருக்கு அடி உதை கொடுத்துள்ளது சர்ச் கூலிப்படை ஒன்று.

திருச்சியில் சிறுவர்களை மதமாற்றம் செய்ய முயன்றவர்களைத் தடுத்த இளைஞருக்கு சர்ச் பெயரைச் சொல்லி, மர்ம நபர்கள் அடி உதை கொடுத்து தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

திருச்சி-திண்டுக்கல் சாலையில் தேசிய கல்லூரி அருகே உள்ளது மாந்தோப்பு பகுதி! இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த கோடை விடுமுறையின் போது இந்தப் பகுதிக்கு தினமும் காலை திருச்சி புறநகர் பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் இருந்து ஒரு வேன் வரும். அங்கிருக்கும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேனில் திருச்சி பொன்னகர் சர்ச்சுக்கு அழைத்துச் சென்று இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் கொண்டு வந்து விட்டு விடுவர்.

பெற்றோர்களிடம் குழந்தைகளை சர்ச்சுக்கு அழைத்துச் சென்று பொது அறிவுப் பாடம் நடத்துகிறோம் என்று வேனில் வந்தவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி பெற்றோரும் அனுப்பி வைத்துள்ளனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட பழனி என்பவரின் மகனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த  மகனை என்னவென்று விசாரித்துள்ளார் பழனி! அப்போது சர்ச்சுக்கு அழைத்துச் சென்று முழங்கால் போட்டு வெகுநேரம் ஜெபம் செய்யுமாறு கூறுவார்கள் என்றும் பிறகு பிஸ்கட் கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து தங்களை அனுப்பி விடுவார்கள் என்றும் அந்தச் சிறுவர்கள் கூறியுள்ளனர்!

இதனால் 20 நாட்களுக்கு முன்னர் குழந்தைகளை அழைப்பதற்காக மீண்டும் வந்த போது அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் மதமாற்றம் செய்வதற்காக குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி அனுப்ப மறுத்து விட்டனர்!

இது குறித்து கருமண்டபம் பகுதியில் உள்ள போலீஸ் பூத்தில் அந்தப் பகுதி இளைஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து எச்சரித்துள்ளனர். அதன் பிறகு வேன் சில நாட்கள் வரவில்லை.

இந்நிலையில், குழந்தைகள் தங்கள் சர்ச்சுக்கு வராத நிலைக்கு மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர்தான் காரணம் என்று சிலர் சர்ச்சின் நிர்வாகத்தில் கூறியுள்ளனர்!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இதை அடுத்து, கேட்டரிங் வேலை செய்துவரும் லட்சுமணன் தேசியக் கல்லூரி அருகே நேற்று இரவு மொபட்டில் சென்றபோது, ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் அவரை வழிமறித்து சர்ச் விவகாரத்தில் நீதானே தலையிட்டாய் என்று கூறி லட்சுமணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்!

இந்தத் தாக்குதலில் காயமடைந்த லட்சுமணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோர்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்! அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்!

இப்படி கோடை விடுமுறை, பொது அறிவு வகுப்பு என்றெல்லாம் கூறி, குழந்தைகளை மதமாற்றம் செய்ய முயன்ற சம்பவம் திருச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

ஏற்கனவே பாதிரியார் எஸ்ரா சற்குணம், “இந்துக்களின் மூஞ்சியில் ஓங்கி இரண்டு குத்து குத்து; ரத்தம் வரட்டும்; அவனை ஒப்புக்கொள்ள வை” என்று கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிட்டு இருப்பதால், இப்போது கிறிஸ்தவர்கள் வன்முறையை கையில் எடுத்துள்ளனர் என்று அந்த பகுதி மக்கள் கோபத்துடன் கூறுகின்றனர்!

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கிறிஸ்துவம் சொல்வதாக பொய் சொல்லி, இப்படி மூஞ்சியில் ரெண்டு குத்து குத்து, ரத்தம் வரட்டும் என்று பாதிரிகள் ரத்த வெறி பிடித்து அலைவது தான் கண்கூடு என்று விழிப்பு உணர்வு அடைந்த மக்கள் வருத்ததுடன் கூறுகின்றனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img