செங்கோட்டை அருகே ஆசிரியையுடன் காணாமல் போன மாணவன்: தேடுதல் வேட்டை தீவிரம்
செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதியில் காணாமல் போன ஆசிரியை மற்றும் மாணவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரகுமார், ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களின் மகன் சிவசுந்தர் (15), தென்காசி – கடையநல்லூர் சாலையில் குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி முதல் மாணவன் சிவசுந்தரைக் காணவில்லை. இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் மாரியம்மாள் புகார் செய்தார். அவரது புகாரின் அடிப்படையில் மாணவனை போலீஸார் தேடி வந்தனர். செங்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியை கோதை லட்சுமி (23) இவர் திடீரென மாயமானார். இவர் காணாமல் போனது குறித்து செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே வயது வித்தியாசத்தையும் ஆசிரியை மாணவன் முறையை மீறி காதல் ஏற்பட்டதாகவும், 2 பேரும் வெளியூருக்கு தப்பிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் பல்வேறு கோணங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவர் குறித்தும் மேலும் பல்வேறு தகவல்கள் வாட்ஸ்அப்பில் வெளியாகி, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும், இருவரும் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் சில புகைப்படங்கள் வெளியாயின. ஆனால் இவற்றில் பெரும்பாலான படங்கள், இதற்கு முன்பு பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொலை மற்றும் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகளின் படம் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டது. வாட்ஸ் அப்பில் போலியான படங்கள் மற்றும் தகவல் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆசிரியை மற்றும் மாணவனைக் கண்டுபிடிக்க செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் மீட்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இருவரின் படத்தையும் வைத்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சற்றுமுன்…
தில்லி திரும்பிய ராகுல்; சோனியா- பிரியங்கா ரகசிய ஆலோசனை!
புது தில்லி: சுமார் 2 மாத கால நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தில்லி திரும்பினார். அதே நேரம், அவர் தில்லிக்கு வருவதற்கு சில மணி நேரத்துக்கு…
கரூர் பா.ம.க வேட்பாளரை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய பா.ம.க கூட்டத்தில் சூளுரை
சத்துணவு ஊழியர் போராட்டம் தேவையற்றது: தமிழக அரசு
தள்ளுபடியாகும் அச்சத்தால் ஜாமீன் மனு விவகாரத்தில் பின்வாங்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி
நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமை பொறியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு கொலை மிரட்டல்: ஐ.எஸ். இயக்கம் இமெயில்
குடியிருப்பை காத்துக்கொள்ள முஸ்லீமாக மதம் மாற்றியுள்ளது தேசத்துக்கு அவமானம்: ராம.கோபாலன்
தமிழ்நாடு அரசின் திருக்குறள் பரிசு பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கரூர் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா
தண்ணீர் பிடிப்பதில் தகராறு
சூதாட்டம் 6 பேர் கைது