கணவர் முதல்வராக… ஜோதிட ஆலோசனை! தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் வேண்டுதல்!

Reporters Diary சற்றுமுன் சென்னை தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

durga in pillayarpatti - 2026

திமுக., தலைவரும் தனது கணவருமான மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, கோயில் கோயிலாக செல்லத் தொடங்கியுள்ளார் துர்கா ஸ்டாலின் என்கிறார்கள்.

முன்னதாக, ஜோதிடர் பாலாஜியை சந்தித்து, ஆலோசனைகளைக் கேட்ட துர்கா ஸ்டாலின், தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் தரிசனத்தை மேற்கொண்டார். தனது கணவருக்காக, கோயில்களுக்குச் சென்று, பிரார்த்தனைகளை முன்வைத்து வருகிறார்.

durga stalin athivarathar 1 - 2026திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தந்தையின் வழியில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ வழிவந்த கடவுள்களை மட்டுமே வணங்குபவர்கள் என்பதால், திமுக.,வின் அரசவை பாதிரியாரான எஸ்றா சற்குணத்தின் மூலம் செபம் செய்து கொள்வார். தான் கோயில்களுக்குச் சென்று சாமி குத்தாம் ஆகிவிடக் கூடாது என்பதால், தன் மனைவியின் மூலம் கோயில்களில் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வதாக கருத்துகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். ஜூலை 19 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு பிள்ளையார்பட்டிக்கு வந்த அவர், தங்கக் கவச விநாயகரை தரிசித்தார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

அறங்காவலர்கள் அண்ணாமலை செட்டியார், நாகப்பச் செட்டியார் பிரசாதமும், பிச்சை குருக்கள் விநாயகர் படமும் வழங்கினர்.

கோயில் வாசலில் இருந்து மீண்டும் திருவீசர் சந்நிதியைப் பார்த்து வணங்கிவிட்டு, கோயிலுக்கு வெளியே வந்தார். அவருடன் பக்தர்கள் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.