அப்துல் கலாம் அவார்ட்! தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
abdul kalam
abdul kalam

சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் வழங்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் நினைவாக வழங்கப்படும் ‘அப்துல் கலாம்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக தமிழக அரசு சார்பில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ‘அப்துல் கலாம் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது வழங்க தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுச் சான்றிதழும், 1 சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்காலம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு வரும் ஜூலை 15ம் தேதிக்குள் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.