பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து சிறுபான்மை சமூகமான பிராமண சமூகப் பெண்களை கேவலப் படுத்தும் வகையிலும் சினிமா மூலம் கருத்துகளைப் பரப்பும் நடிகர் சந்தானம், ஜான்ஸன், ராஜநாராயணன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது.
அந்த மனுவில்…
இந்து சாதி சிறுபான்மை பிராமண சமுதாயத்தை இழிவு படுத்தும் A1 – Accused நம்பர் 1 என்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்! நடிகர் சந்தானம், எழுத்து இயக்கம் ஜான்சன் தயாரிப்பு ராஜநாராயணன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து சாதி சிறுபான்மையினர் பிராமணசமுதாயத்தையும், பிராமண சமுதாயப்பெண்களை இழிவுபடுத்தும் வகையில்எடுக்கப்பட்ட “அக்யூஸ்டு நம்பர் ஒன்” A1 திரைப்படத்தை தடை செய்திடவும் ,இந்து சாதி சிறுபான்மை பிராமண சமுதாய மக்களையும், பெண்களை இழிவுபடுத்திய நடிகர் சந்தானம் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டியும் புகார் மனு.
திரைப்பட நடிகர் சந்தானம் நடிப்பில், எழுத்து இயக்கம் ஜான்சன் அவர்கள் தயாரிப்பு ராஜநாராயணன் இவர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்ட A1 accused நம்பர் ஒன் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
அதில் “லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் நடக்கும் கலாசலான லவ் ஸ்டோரி,” “ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி”
” மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்,” காதலுக்காக குடும்பத்தையே உதறிய புரட்சி நாயகன்என்றும், திரைப்படகாட்சி வரக்கூடிய 27 7 2019 அந்த திரைப்படம் வெளிவர இருப்பதாக விளம்பரம் வெளியாகி இருக்கிறது .கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை அவர்களுடைய நடைமுறையை கேலி கிண்டல் செய்தும், புண்படுத்தும் நோக்கில் வெளியாகியிருக்கிறது.
வேண்டுமென்றே சாதிக் கலவர நோக்கம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ள நிலையில் ஒரு வீணான பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு இந்த திரைப்படம் எடுக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறோம்.இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது.
அப்படி இருக்கையில் இந்து சாதி சிறுபான்மை பிராமணசமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்திடவும், மேற்படி நடிகர் சந்தானம் ஜான்சன் ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டியும் இந்த புகார் மனுவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்… என்று கூறப் பட்டுள்ளது.
இந்த மனுவின் நகல்கள், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி, திரைப்பட தணிக்கைக் குழு தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ட்ரைலர்..