கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் சந்நிதிக்கு எதிர்புறம் உள்ள பிரம்மாண்டமான கொடிமரத்தில் உற்சவ கொடியை உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் ஏற்றி வைத்தார்.
தேர் திருவிழா இம்மாதம் 29ஆம் தேதியும் சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசன விழா 30ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றம் இன்று காலை தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் கொடி ஏற்றி வைத்தார்.