
தமிழ்நாடு யங் திங்கர்ஸ் ஃபோரம் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சியில், ராம் மாதவ்வின் ‘Because India Comes First’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இண்டியா பவுண்டேஷன் அமைப்பின் ஆளுநர் குழுவில் உறுப்பினராக இருப்பவர், ராம் மாதவ். இவர் எழுதிய ‘Because India Comes First’ புத்தகத்தின் வெளியீடு நிகழ்ச்சி, சென்னை சிபிஆர் கன்வென்சன் செண்டரில் டிச.20 நேற்று நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சின்மயா மிஷன் ஸ்வாமி மித்ரானந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.