சென்னை:
சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் வேலூரில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற மின்சார ரெயில் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரயில் சேவை பாதிப்படைந்தது.
இதை அடுத்து, மற்ற தண்டவாளங்களில் ரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. ரயில் சேவை பாதிப்படைந்ததால், மின்சார ரயிலில் பயணம் செய்த பலரும் பேருந்து, ஆட்டோ பிடித்து தங்களது ஊருக்குச் சென்றனர்.
இதனால் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப் பட்டது. காலையில் அலுவலகத்துக்குச் செல்வோர் பேருந்துகளில் தொங்கிக் கொண்டு சென்றனர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பின் ரயில் போக்குவரத்து படிப்படியாக சீரானது.



