அதி்முக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: எடப்பாடி, ஓபிஎஸ் மீண்டும் போட்டி!

சென்னை தமிழகம்
admk candidate list 1 - 2026

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வமும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று ஒரே நாளில்  நடத்தப்பட்டது இதைத் தொடர்ந்து தொகுதி வேட்பாளர்களை   இறுதி செய்யும் வகையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம் ஆகியோர் அடங்கிய ஆட்சி மன்றக் குழு ஆலோசனை நடத்தியது. ஆலோசனை முடிவில், முதற்கட்டமாக 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது 

அதன்படி, எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் போட்டியிடுகின்றனர். 

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம்  ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்  நிலக்கோட்டை தனித் தொகுதியில் அங்கு எம்.எல்.ஏவாக இருக்கும் தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர் 

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்தவுடன் அதிமுக சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.