கர்ப்பிணியை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கமுக்கமான காவல்துறை: சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு!

IMG 20220227 WA0024 - 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக குற்றச்சாட்டு

கர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லை
என்றால் காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள் என பாஜக குற்றச்சாட்டு.

திருவண்ணாமலை நகராட்சியில் பாஜக பெண் வேட்பாளர்கள், கர்ப்பிணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியது மற்றும் தேர்தலுக்கு பிறகு பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவினரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து, பாஜக சார்பில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்துகொண்டு பேசும்போது, “பாஜக பெண் வேட்பாளர் மற்றும் கர்ப்பிணி நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுத்து ஒரு வாரமாகியும் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்யவில்லை. காவல் துறையை ஏவல் துறையாக திமுகவினர் பார்க்கின்றனர். நடைபயிற்சிக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

கர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களே, காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள்.

பாஜகவினர் சாதுவாக உள்ளனர். இதே நிலை நீடித்தால், பாஜகவினர் மீது கை வைக்கப்பட்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் ஆகியோர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

கர்ப்பிணி தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினரை கைது செய்ய வேண்டும்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்றுள்ள வெற்றியானது ஜனநாய கத்துக்கு கிடைத்த தோல்வி. மத்திய அரசின் திட்டங்களில், தி.மலை மாவட்டத்தில்தான் அதிகளவில் ஊழல் நடைபெற்றுள்ளது.

ஊழல் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. அடுத்து சிபிஐ நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவின் ஊழலை அதிமுக தட்டிக் கேட்காமல் பாஜகவினர் தட்டி கேட்பதால், அவர்களுக்கு கோபம் வருகிறது.

திமுகவின் அநீதியை பாஜக தட்டி கேட்கும்” என்றார். இதில், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories